ஊரடங்கிற்கு பின் இதை முக்கியமாக கவனியுங்கள்: யோகிபாபு அறிவுரை

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து அலுவலகங்கள், கடைகள், தொழிற்சாலைகள் ஆகியவை மூடப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின்னர் ஒருசில அலுவலகங்களும், மே 3ஆம் தேதிக்கு பின்னர் அனைத்து அலுவலகங்கள் மற்றும் கடைகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
இந்த நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக கடைகள், அலுவலகங்கள், உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் மீண்டும் அவற்றை திறக்கப்படும்போது ஒரு சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று நடிகர் யோகிபாபு தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்

ஊரடங்கு உத்தரவுக்கு பின் மீண்டும் அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு செல்பவர்கள் தயவுசெய்து ஒன்றை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் அலுவலகம் மற்றும் தொழிற்சாலை மின் இணைப்பு சரியாக வேலை செய்கிறதா? என்று அதனை ஆன் செய்வதற்குமுன் சோதனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள். அலுவலகத்திற்குள் நுழைந்தவுடன் சுவிட்சை ஆன் செய்ய வேண்டாம் ஏனெனில் கடந்த ஒரு மாதமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளதால் பூனை மற்றும் எலிகள் மின் வயர்களை சேதப்படுத்தி இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு. இதனால் நீங்கள் திடீரென சுவிட்சை ஆன் செய்தால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே மின் வயர்களை சோதனை செய்தபின்னர் அதை ஆன் செய்யுங்கள் என்று யோகிபாபு அறிவுரை கூறியுள்ளார். 

யோகிபாபுவின் இந்த அறிவுரைக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே சமீபத்தில் மூடப்பட்ட தியேட்டர் ஒன்றை திறந்து பார்த்தபோது அதில் இருந்த அனைத்து சீட்டுக்களையும் எலிகள் கடித்து குதறி இருந்ததாக வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். எனவே யோகிபாபுவின் அறிவுரையை அனைவரும் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

ஊரடங்கு உத்தரவால் ஊருக்குள் வரும் காட்டு விலங்குகள்: செங்கல்பட்டு பகுதியில் பதட்டம்

காட்டு விலங்குகள் வாழும் பகுதியை மனிதன் ஆக்கிரமித்த நிலையில் தற்போது இந்த நிலைமை தலைகீழாகி ஊருக்குள் காட்டு விலங்குகள் வலம் வரத் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நடிகை காஜல் அகர்வால் செய்த மிகப்பெரிய நிதியுதவி

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்களுக்கு, நலிந்த நடிகர்களுக்கு என பல்வேறு தரப்பினர்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது

கொரோனா பரபரப்பிலும் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்: 3 பேர் கைது

உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் கொரோனா வைரசால் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் மட்டுமே கொரோனவுக்கு எதிராக மீம்ஸ்களும், கொண்டாட்டங்களும் நடந்து வருவது

காஜல் அகர்வாலிடம் உதவி கேட்ட 'பீட்டா இந்தியா'

இந்தியாவில் விலங்குகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் 'பீட்டா இந்தியா' என்ற அமைப்பு தற்போதைய கொரோனா ஊரடங்கு நேரத்தில் தெருவில் உணவின்றி நடமாடி வரும் நாய் உள்ளிட்

தினமும் 2 மணி நேரம் டாஸ்மாக் திறக்கும் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் மூடப்பட்டுள்ளதால் மது பிரியர்களுக்காக தினமும் 2 மணி நேரம் டாஸ்மாக் கடைகளை திறந்து வைக்க வேண்டும் என சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த