சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம்!

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று சென்ட்ரல் ரயில் நிலையம். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கு வந்து போவதால் 24 மணி நேரமும் பிசியாக இருக்கும் ரயில் நிலையங்களில் ஒன்று

இந்த நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் வைக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாகவே கோரிக்கைகள் எழுந்து வந்தன. இந்த நிலையில் இன்று அரசு திட்டங்களை தொடங்கி வைக்கவும், தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து வைக்கவும் சென்னை வந்த பிரதமர் மோடி, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை வைத்தார். இனி சென்ட்ரல் ரயில் நிலையம், எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் என்றே அழைக்கப்படும்

முன்னதாக சென்னை கிளாம்பாக்கம் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடிக்கு கூட்டணி தலைவர்கள் நினைவு பரிசையும், செங்கோலையும் பரிசாக அளித்தனர். இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

More News

ரீஎண்ட்ரி படத்தில் லைலாவின் வித்தியாசமான கேரக்டர்

அஜித் நடித்த 'தீனா', 'விக்ரம் நடித்த 'தில்' உள்பட பல தமிழ் படங்களில் நடித்த நடிகை லைலா நீண்ட இடைவெளிக்கு பின் 'அலிசா' என்ற தமிழ்ப்படத்தில் நடிக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

40 தொகுதிகளிலும் தனித்து போட்டி: பிரபல நடிகரின் கட்சி அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கிட்டத்தட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது.

சிம்புவின் அடுத்த பட இயக்குனர்-தயாரிப்பாளர் குறித்த தகவல்

சிம்பு நடித்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் வெங்கட்பிரபுவின் 'மாநாடு' என்ற அரசியல் படத்தில் நடித்து வருகிறார்

கார்த்தியின் அடுத்த படத்தில் ஜோதிகா?

'தேவ்' படத்தை அடுத்து கார்த்தி தற்போது 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். நாயகியே இல்லாத த்ரில் படமாக இந்த படம் உருவாகி வருகிறது.

அடுத்தடுத்த வாரத்தில் வெளியாகும் ஜிவி பிரகாஷின் 2 படங்கள்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'வாட்ச்மேன்' திரைப்படம் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு விருந்தாக வெளியாகவுள்ளது என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்