மதுரவாயல் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது சென்னை கல்லூரி மாணவியா? திடுக்கிடும் தகவல்

  • IndiaGlitz, [Friday,March 15 2019]

சென்னை மதுரவாயல் அருகே உள்ள ஏடிஎம் ஒன்றில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் ஏடிஎம்-இல் பணம் நிரப்பி கொண்டிருந்த ஊழியர்களை கத்தியால் தாக்கி கொள்ளையடித்தனர். கொள்ளையர்கள் ஹெல்மெட் போட்டிருந்ததால் அவர்கள் யார்? என்பதை சிசிடிவி காட்சியின் மூலமும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் இந்த கொள்ளையர்களை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் இன்று இந்த கொள்ளையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மூவரில் ஒருவர் சென்னை கல்லூரியில் படித்து வரும் மாணவியும் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

இந்த கொள்ளையில் ஈடுபட்ட அக்யோ மாயே, அமு, கிரியா ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் அக்யோ மாயே, அமு ஆகிய இருவரும் நைஜீரியாவை சேர்ந்தவர்கள் என்பதும், கிரியா என்பவர் சென்னை கல்லூரி மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் மூவரிடமும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
 

More News

நியூசிலாந்து துப்பாக்கி சூடு: நூலிழையில் உயிர்தப்பிய கிரிக்கெட் வீரர்கள்

நியூசிலாந்து நாட்டில் சற்றுமுன்னர் மர்மநபர் ஒருவர் மசூதி ஒன்றில் புகுந்து சரமாரியாக துப்பாக்கி சூடு இதுவரை 6 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் காயம் அடைந்துள்ளதாகவும்

இந்த கேள்வியெல்லாம் உங்களுக்குத்தான் மிஸ்டர் சி.எம்! கமல்ஹாசனின் ஆவேச வீடியோ

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து மற்ற ஊடகங்கள் பரபரப்பாக செய்திகள் வெளியிடும் முன்னரே கமல்ஹாசன் இந்த விஷயத்தில் போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

வாரம் 2 நாள் லீவு விடுங்க: பொள்ளாச்சி விவகாரம் குறித்து நடிகர் விவேக்

செல்போன், இண்டர்நெட் என்று வந்ததோ அன்றுமுதல் பெற்றோர் உள்பட உறவுகளிடம் பேசுவதே குறைந்து விட்டது

செல்போன்கள் கையிலிருக்கும் அணுகுண்டு: உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கருத்து!

பொள்ளாச்சி பாலியல் சம்பவங்கள் போன்ற கொடூரமான சம்பவங்கள் நடைபெற முக்கிய காரணங்களில்து சமூக வலைத்தளங்களும் ஒன்று.

வெட்டி சாகடியுங்கள்: பொள்ளாச்சி குற்றம் குறித்து ஐஸ்வர்யா தத்தா

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து திரையுலகினர் பலர் கடும் ஆத்திரத்துடன் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ள நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகை ஐஸ்வர்யா தத்தா வீடியோ