close
Choose your channels

வீடியோ பாத்துட்டு வந்து வாதாடுங்க.....! மதன் வக்கீலை விளாசிய நீதிபதி....!

Thursday, June 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மதனின் பேச்சுக்கள் கேட்க முடியாத அளவிற்கு உள்ளது, முதலில் அந்த வீடியோக்களை பார்த்து விட்டு அப்பறம் வந்து வாதிடுங்க, என வக்கீலை நீதிபதி விளாசியுள்ளார்.

கடந்த 2 நாட்களாக டாக்சிக் மதனின் பேச்சுக்கள் தான் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. யுடியூப் சேனல் மூலமாக ஆபாச பேச்சுக்கள் பேசி சிறுவர்களை மூளைச்சலவை செய்ததாகவும், பெண்களிடம் அந்தரங்க பேச்சுக்கள் பேசி அத்துமீறி நடந்துகொண்டதாகவும் மதன் மீது ஆன்லைன் மூலம் 159 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து சென்னை மத்திய சைபர் கிரைம் காவல் துறையினர், மதனை நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். இதன்பின் மதன் தலைமறைவானார். தற்போது இவன் மனைவி கிருத்திகாவை கைது செய்து, காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் முன்ஜாமீன் வேண்டி, மதன் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் மதன் சார்பாக வாதிட்ட நீதிபதி, "சக போட்டியாளர்கள் தான் புகார் அளித்துள்ளனர், பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகாரளிக்கவில்லை என்று வாதிட்டார்.

காவல் துறை தரப்பில் கூறியிருப்பதாவது, "ஆபாச பேச்சுக்கள் மூலம் பெண்களை இழிவுபடுத்தியும், சிறார்களை மூளைச்சலவை செய்துள்ளான். மதனின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதால், அவனுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என கூறினர்.

இதையடுத்து நீதிபதி தண்டபாணி பேசியதாவது, மதன் வழக்கறிஞரை பார்த்து "நீங்க வீடியோவை பார்த்தீங்களா...? ஆரம்பமே கேட்க முடியாத அளவிற்கு உள்ளது. அனைத்து வீடியோக்களையும் பார்த்துவிட்டு நாளை வந்து வாதிடுங்கள்" என்று உத்தரவிட்டு, வழக்கை தள்ளிவைத்துள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.