நடிகர் சிம்பு மீது வேல்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

  • IndiaGlitz, [Tuesday,August 29 2023]

நடிகர் சிம்பு மீது வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிம்பு நடிப்பில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ’கொரோனா குமார்’ என்ற படம் உருவாக இருந்தது. இந்த படத்திற்காக நடிகர் சிம்புவுக்கு வேல்ஸ் நிறுவனம் ரூபாய் 4.50 கோடி ரூபாய் அளித்திருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு நடிக்காததை அடுத்து வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக விசாரணையில் இருந்த நிலையில் தற்போது சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேல்ஸ் பட நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ரூபாய் ஒரு கோடி உத்திரவாதத்தை நடிகர் சிம்பு செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

கணவருடன் தனிக்குடித்தனம் செல்கிறாரா ரோகிணி? விஜயா அதிர்ச்சி.. 'சிறகடிக்க ஆசை' அப்டேட்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றான 'சிறக்கடிக்க ஆசை' என்ற சீரியல் மிகக் குறுகிய நாட்களில் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டது. குறிப்பாக முத்து, மீனா ஆகிய இருவரது நடிப்புக்கு

'ஜெயிலர்' படத்தின் அந்த காட்சியை நீக்க வேண்டும்: டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை நீக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.  

'நான் சொல்றதை கட் பண்ணாம போடுங்க.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட யோகிபாபு..!

காமெடி நடிகர் யோகி பாபு ஹீரோவாக நடித்த 'லக்கிமேன்  என்ற திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அவர் இன்று செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணையா? நடிகை வரலட்சுமி விளக்கம்..!

நடிகை வரலட்சுமியிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை செய்ததாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஷாருக்கான் - நயன்தாராவின் செம டான்ஸ் பாடல்.. 'ஜவான்' வீடியோவை வெளியிட்ட அட்லி..!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்  நடித்த 'ஜவான்' திரைப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.