சென்னை ஐஐடியில் முதலாமாண்டு மாணவி தூக்கிட்டு  தற்கொலை!

  • IndiaGlitz, [Saturday,November 09 2019]

சென்னை ஐஐடி விடுதி அறையில் முதலாமாண்டு படித்து வந்த கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஐஐடி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட மாணவி கேரளா மாநிலத்தை சேர்ந்த கொல்லம் பகுதியை சேர்ந்தவர் என்றும், இந்த மாணவியின் பெயர் பாத்திமா லதீப் என்றும், சென்னை ஐஐடியில் இவர் எம்.ஏ முதலாண்டு படித்து வந்தவர் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த மாணவியின் தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னை ஐஐடியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கப்பல் கட்டுமான துறையில் கல்வி பயின்று கொண்டிருந்த கேரளாவைச் சேர்ந்த சாகுல் கோர்னாத் என்ற 23 வயது மாணவர் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதேபோல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி மாணவியான ரஞ்சனா குமாரி என்பவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

அயோத்தி தீர்ப்பு குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினி கருத்து

நாடே பெரிதும் எதிர்பார்த்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தாயையும் மகளையும் படுக்கைக்கு அழைத்த தமிழ் திரைப்பட நடிகர்! அதிர்ச்சி தகவல்

மாடல் அழகி மற்றும் அவரது தாய் ஆகிய இருவரையும் படுக்கைக்கு அழைத்தது உண்மைதான் என தமிழ் திரைப்பட நடிகர் ஒருவர் ஒப்புக்கொண்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தீர்ப்பு எங்களுக்கு திருப்தி இல்லை: சன்னி வக்ஃப் வாரியம்

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பில்,'சர்ச்சைக்குரிய அயோத்தியின் இடம் இந்துக்களுக்கு சொந்தம் என்றும்,

அயோத்தி இந்துக்களுக்கே சொந்தம், கோவில் கட்டவும் அனுமதி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

அயோத்தி வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் வாசிக்க தொடங்கிய நிலையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அயோத்தி இந்துக்களுக்கே சொந்தம் என்றும் சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டவும் உச்சநீதிமன்றம் அனுமதி

அயோத்தி வழக்கு: தீர்ப்பின் முதல்கட்ட விபரங்கள்

அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த தீர்ப்பில் முதலில் 5 நீதிபதிகள் கையெழுத்திட்டனர். இந்த தீர்ப்பை 5 நீதிபதிகளும் ஏகமனதாக ஏற்று தீர்ப்பு அளிக்கின்றனர்.