எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு எதிரொலி: சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் மாற்றம்

  • IndiaGlitz, [Saturday,March 25 2017]

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இப்போதைய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் தொடர்ந்து பதவியில் இருந்தால் ஆளுங்கட்சிக்கு ஆதரவான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதால் அவரை மாற்றம் செய்ய வேண்டும் என திமுக உள்பட பல எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்த தேர்தல் ஆணையம் சற்றுமுன்னர் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் அவர்களை பணியிட மாற்றம் செய்துள்ளது.
ஜார்ஜ் அவர்களுக்கு பதிலாக சென்னை மாநகர காவல் துறையின் புதிய ஆணையராக கரன் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கரன் சின்ஹா சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக பணிபுரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தளபதி 62' குறித்த முக்கிய தகவல்

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இணையும் ரஜினி-விஜய்?

இந்தியாவின் மிக பிரமாண்டமான படமான 'பாகுபலி 2' படத்தின் ரிலீஸ் தேதியை உலகில் உள்ள சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் சென்னையில் நடைபெறவுள்ளது

டோலிவுட் செல்கிறது 'போகன்'. ஜெயம் ரவி, அரவிந்தசாமி கேரக்டரில் நடிக்க போவது யார்?

ஜெயம் ரவி, அரவிந்தசாமி, ஹன்சிகா நடிப்பில் லட்சுமண் இயக்கிய 'போகன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று ஜெயம் ரவிக்கு இன்னொரு வெற்றி படமாக அமைந்தது.

ரஜினிகாந்தை தாராளமாக பாராட்டலாம். சுப்பிரமணியன் சுவாமி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி இலங்கையில் நடைபெறும் ஈழத்தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஆர்.கே.நகர் தேர்தலில் 'விஜய் மக்கள் இயக்கம்' ஆதரவு யாருக்கு? எஸ்.ஏ.சி பேட்டி

இளையதளபதி விஜய்யின் 'விஜய் மக்கள் இயக்கம்' அவ்வப்போது அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருவதால், இந்த இயக்கம் ஒவ்வொரு தேர்தலின்போதும் யாருக்கு ஆதரவு என்கிற நிலையை எடுத்து வருகின்றது