மீண்டும் பயங்கர தீ: தீ நகரானது தி.நகர்

  • IndiaGlitz, [Thursday,June 01 2017]

சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் நேற்று அதிகாலை 4.45 மணிக்கு பிடித்த தீ, இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து எரிந்து வருகிறது. இன்று அதிகாலை சரியாக 3.19 மணிக்கு அலங்கார வளைவுகள் உள்பட கட்டிடத்தின் முன்பகுதி பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. பின்னர் காலை 7 மணி அளவில் கட்டிடத்தின் உள்பகுதியும் இடிந்துவிழுந்ததால் கிட்டத்தட்ட கட்டிடத்தின் பெரும்பகுதி இடிந்துவிட்டது.

கட்டிடம் இடிந்து விழுந்தாலும் தீ இன்னும் கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. தீயணைக்கும் பணியில் சுமார் 450 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கட்டிடத்தின் முன்பகுதி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்ட வீரர்கள் தற்போது உள்பகுதியில் எரிந்து வரும் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

ஹைட்ராலிக் எந்திரங்கள் மூலம் தொடர்ந்து தீ அணைக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்து காரணமாக தி.நகர், தீ நகராக மாறியதோடு, அந்த பகுதி முழுவதிலும் புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றது. புகை காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்காக மருத்துவர்கள் குழு தி.நகரில் முகாமிட்டுள்ளனர்.

More News

சென்னை சில்க்ஸ் தீ விபத்து எதிரொலி: அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் வெளியேற்றம்

சென்னை தி.நகரிலுள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடம் தொடர்ந்து இரண்டாவது நாளாக எரிந்து வருகிறது...

சென்னை சில்க்ஸ் உள்ளே உள்ள தங்கம் என்ன ஆகியிருக்கும்? ஒரு திடுக்கிடும் தகவல்

இன்று அதிகாலை சென்னை தி.நகர் சென்னை சில்க்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்து சென்னை நகரையே உலுக்கியுள்ளது...

திருமணம் ஆகப்போகும் நேரத்தில் இது தேவையா? சமந்தாவை வறுத்தெடுத்த ரசிகர்கள்

பிரபல நடிகை சமந்தா தமிழ், மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நிலையில்...

கார் எரிந்து மூவர் பலியான சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பம்! குடும்பத்துடன் தற்கொலையா?

கடந்த 27ஆம் தேதி சென்னையை சேர்ந்த ஜெயதேவன் என்ற ஆடிட்டரின் குடும்பத்தினர் சென்ற கார் மாமல்லபுரம்...

சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிந்து விழுந்தது. தி.நகரில் பெரும் பரபரப்பு

இன்று அதிகாலை முதல் சென்னை தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் நிலையில்...