காதலர் தினத்தில் நாய்க்கு தாலி கட்டிய வாலிபர் கைது!!

  • IndiaGlitz, [Thursday,February 14 2019]

ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினம் வரும்போது சர்ச்சைக்குரிய நிகழ்வுகளும் நடப்பதுண்டு. ஒருசில அமைப்புகள் காதலர்களை பிடித்து வைத்து அவர்களுக்கு கட்டாய திருமணம் செய்து வரும் கொடூரம் இன்னும் வட இந்தியாவில் அதிகம் நடந்து வருகிறது.

அந்த வகையில் சென்னை கொருக்குப்பேட்டையில் வாலிபர் ஒருவர் காதலர் தினத்திற்கு எதிராக இன்று நடுத்தெருவில் நின்று கோஷம் போட்டு கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த வாலிபர் நாய்க்கு தாலி கட்டினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றனர். நடுத்தெருவில் வாலிபர் ஒருவர் நாய்க்கு தாலி கட்டிய விவகாரம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

More News

ஸ்ரீதேவிக்காக கொள்கையை விட்டுக்கொடுத்த அஜித்!

அஜித் என்றாலே நல்ல நடிகர், மனிதநேயம் உள்ளவர் என்பது மட்டுமின்றி அவர் எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாதவர், எந்த ஊடகத்திற்கும் பேட்டி தராதவர் ஆகியவையும் நினைவுக்கு வருவதுண்டு

சென்னையில் நடிகை யாஷிகா தூக்குபோட்டு தற்கொலை

சென்னையில் துணை நடிகை யாஷிகா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் திரைத்துறையினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

சினேகாவின் புரட்சிகரமான சாதனைக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என பள்ளிகளில் பாடம் நடத்தினாலும் அந்த பள்ளியில் சேர்வதற்கு ஜாதி சான்றிதழ் கட்டாயம் தேவைப்படுகிறது.

சென்னை திரும்பும் விஜயகாந்த்: சுறுசுறுப்பாகும் தேமுதிக தொண்டர்கள்

விஜயகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்களை அமெரிக்காவில் இருந்து கொண்டே தமிழக மக்களுக்கு கூறி வந்தார்

சென்சாருக்கு செல்லும் தனுஷ் படம்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் 'அசுரன்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நேற்று முதல் விருதுநகரில் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.