எனக்கு இதுவரை யாரும் சொன்னதே இல்லை! சேரன் காட்டம்

  • IndiaGlitz, [Friday,April 26 2019]

நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் நடிகர், நடிகைகளின் பிறந்த நாளின்போது சங்கத்தின் சார்ப்பில் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவிப்பதை ஒரு வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய சமுத்திரக்கனி, பிளாக் பாண்டி மற்றும் நடிகை சரண்யாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறியுள்ள இயக்குனர் சேரன், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வது பாராட்டத்தக்கது. ஆனால் நானும் ஆயுள்கால உறுப்பினர்தான். எனக்கு ஒரு வருஷம் கூட வாழ்த்து சொன்னதில்லை. இதில் கூட அரசியலா? நல்லா இருக்கட்டும் இந்த சங்கமும், கட்டிடமும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

சேரன் நடித்து இயக்கிய 'திருமணம்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்த நிலையில் அவர் நடித்த அடுத்த படமான 'ராஜாவுக்கு செக்' திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பத்து ரூபாய்க்கு 8 மணி நேரம் போதை! விளைவு தெரியாமல் பயன்படுத்தும் சிறுவர்கள்! கண்டுபிடிப்பது எப்படி?

இந்த போதை பழக்கம் வடமாநில இளைஞர்களிடம் இருந்து, தமிழகத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது...

திரைப்படமாகிறது தங்கமங்கை வீராங்கனையின் வாழ்க்கை வரலாறு

கடந்த சில ஆண்டுகளாக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் அதிகளவில் திரைப்படமாக்கப்படுகிறது.

நடிகை எமிஜாக்சனின் திருமண தேதி அறிவிப்பு!

விஜய் இயக்கிய 'மதராசப்பட்டணம்' படத்தில் அறிமுகமாகி அதன் பின் ரஜினியின் '2.0', விஜய்யின் 'தெறி', தனுஷின் 'தங்கமகன், விக்ரமின் 'ஐ' உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் எமிஜாக்சன். 

பிரதமரை பேட்டியெடுத்த அக்சயகுமாரை கிண்டல் செய்த தமிழ் நடிகர்!

மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்துவிட்டது.

கார்த்திக் நரேனின் அடுத்த படத்தின் நாயகியாகும் 'தர்பார்' நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தர்பார்' படத்தின் நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் நிலையில்