close
Choose your channels

பிரதமரை பேட்டியெடுத்த அக்சயகுமாரை கிண்டல் செய்த தமிழ் நடிகர்!

Thursday, April 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகரும் ரஜினியின் '2.0' படத்தில் வில்லனாக நடித்தவருமான அக்சயகுமார், பிரதமர் மோடியை பேட்டியெடுத்தார். இந்த பேட்டி நேற்று இந்தியா முழுவதும் வைரலானது

இந்த பேட்டியில் அரசியல் சார்ந்த கேள்விகளை பெரும்பாலும் தவிர்த்த அக்சயகுமார், பிரதமர் மோடியின் இன்னொரு பக்கத்தை வெளிப்படுத்தும் வகையிலான கேள்விகளை கேட்டார். எனவே இந்த பேட்டி வித்தியாசமானதாக நடுநிலையாளர்களால் கருதப்பட்டது. இருப்பினும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த பேட்டியை கிண்டல் செய்து கருத்துக்களை வெளியிட்டது

இந்த நிலையில் தமிழ் நடிகர் சித்தார்த் தனது சமூக வலைத்தளத்தில் இந்த பேட்டி குறித்து, 'வில்லனாக அக்சயகுமார் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளார்' என்று கிண்டலுடன் குறிப்பிட்டுள்ளார். நடிகர் சித்தார்த்தின் இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.