என்னுடைய சப்போர்ட் சூர்யா அங்கிளுக்கு: வைரலாகும் குழந்தை நட்சத்திரத்தின் வீடியோ!

  • IndiaGlitz, [Saturday,November 20 2021]

சூர்யா நடித்து, தயாரித்த ’ஜெய்பீம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு ஒட்டுமொத்த திரை உலகம் மற்றும் ரசிகர்கள் பெரும் வரவேற்பு தந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வன்னியர் சங்கம் உள்பட ஒரு சில அமைப்புகள் மட்டும் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சூர்யாவுக்கு பல்வேறு மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தாலும் ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்கு ஆதரவாக இருப்பது குறித்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ’ஜெய்பீம்’ திரைப்படத்தில் ராஜாக்கண்ணு மற்றும் செங்கனி மகளாக அல்லி என்ற கேரக்டரில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஜோஸிகா, சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ’ஜெய்பீம்’ திரைப்படம் மலைவாழ் மக்களின் நன்மைக்காக எடுக்கப்பட்ட படம் என்றும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் சூர்யா அங்கிளின் நோக்கம் என்றும் சூர்யா அவர்கள் நிறைய பேரை படிக்க வைத்து வருகிறார் என்றும் யாரும் அவரை காயப்படுத்தும்படி பேசாதீர்கள் என்று எல்லோரும் அவருக்கு ஆதரவு தாருங்கள் என்றும் என்னுடைய ஆதரவும் சூர்யா அங்கிளுக்கு உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் ஜோஸிகாவின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

கடைசி பொண்ணு நானாக இருக்கணும்: பாலியல் தொல்லையால் தற்கொலை செய்த மாணவியின் உருக்கமான கடிதம்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவை மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தின் பரபரப்பே இன்னும் முடியாத நிலையில் தற்போது மீண்டும்

புயலே புயலே சுத்திவரும் புயலே: ஷிவானியின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை நதியாவின் வேற லெவல் வொர்க்-அவுட் வீடியோ வைரல் 

'பூவே பூச்சூடவா' என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 1986ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான நடிகை நதியா, அதன்பின் ரஜினிகாந்த், சத்யராஜ், விஜயகாந்த், பிரபு, சிவகுமார் உள்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

​​​​​​​நயன்தாராவின் அடுத்த படத்தில் இந்த இரண்டும் கிடையாது: இயக்குனர் தகவல்!

லேடி சூப்பர்ஸ்டார் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் 'கனெக்ட்' என்பதும் இந்த திரைப்படத்தை 'மாயா' என்ற படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் என்பவர் இயக்க உள்ளார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

மீண்டும் கிளாமர் உடையில் பூஜா ஹெக்டே: வைரலாகும் புகைப்படங்கள்!

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே கடந்த சில நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடை உள்பட கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து