குழந்தைகள் ஆபாச பட விவகாரம்: மேலும் ஒருவர் கைது!

  • IndiaGlitz, [Saturday,January 04 2020]

குழந்தைகள் ஆபாச படம் பார்த்தவர்கள் மற்றும் பகிர்ந்தவர்கள் கைது செய்யப்படுவார்கள் என ஏற்கனவே காவல்துறை அதிகாரிகள் எச்சரித்து இருந்த நிலையில் சமீபத்தில் திருச்சியில் குழந்தைகள் ஆபாச படத்தை பார்த்த ஒருவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது

அதேபோல் சென்னையில் 70 வயது நபர் ஒருவர் குழந்தைகள் ஆபாச படத்தை பார்த்தது மட்டுமின்றி கல்லூரி மாணவிகளுக்கு அந்த வீடியோக்களை பகிர்ந்து அத்துமீறி நடந்ததால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் குழந்தைகள் ஆபாச படம் பார்த்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரெண்டா பாசுமாடரி என்பவர் குழந்தைகள் ஆபாச படம் பார்த்ததாக கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல் குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் மற்றும் பகிர்பவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலிசார் எச்சரிக்கை செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

More News

தயாரிப்பாளர், இயக்குனர்களுக்கு இரண்டு கண்டிஷன் போடும் லேடி சூப்பர் ஸ்டார்!

தென்னிந்தியத் திரையுலகின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் விஜய் சாந்தி கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் தீவிரம் காட்டி உள்ளதால் சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.

இந்த மாதிரி டைரக்டர் எல்லாம் ஒருநாளும் தேற மாட்டார்கள்: கே.பாக்யராஜ் பரபரப்பு பேச்சு

சமீபத்தில் கோலிவுட் திரையுலகில் கதைத்திருட்டு விவகாரம் பெரும் பிரச்சனையாக உள்ளது. ஒரு திரைப்படம் வெளியாகவிருக்கும் கடைசி நேரத்தில் திடீரென ஒருவர் கிளம்பி இந்த படம்

ஜெயலலிதாவை அடுத்து திரைப்படமாகும் கருணாநிதி வாழ்க்கை வரலாறு திரைப்படம்

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப்சீரீஸ் 'குயின்' என்ற பெயரில் தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

கமல்ஹாசனின் அடுத்த படம் ரிலீஸ் குறித்த தகவல்

கடந்த 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம்-2 என்ற ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே வெளிவந்து உள்ளதால் கமல் ரசிகர்கள் அவரது படங்கள் வெளியாக காத்திருக்கின்றனர்.

உள்ளாட்சி பதவிகளில் வெற்றி வாகை சூடிய பெண்கள்

பெண்கள் கூட்டமாகப் பொது இடங்களில் பங்குகொள்ளும்போதும் பொதுப்பணிகளில் தங்களது கவனத்தைச் செலுத்தும்பொழுதும் பெரிய அளவிலான மாற்றங்களைக்கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை உலகளவில் பரவலாகக் காணப்படுகிறது