சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா: புதியதாக 5 பேர் பலி

சீனாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வூகான் என்ற மாகாணத்தில் கொரோனா வைரஸ் உருவாகி பரவ ஆரம்பித்தது. இதனை அடுத்து நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது மட்டுமின்றி உலகம் முழுவதும் தற்போது பரவி உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் கொரோனா வைரஸின் தாயகமாக கருதப்படும் சீனா தற்போது கொரோனாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு, இயல்பு நிலை திரும்பி விட்டதாக கூறப்படுகிறது. சினிமா தியேட்டர்கள் உள்ளிட்டவை திறக்கப்பட்டு, போக்குவரத்தும் தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக தற்போது மீண்டும் கொரோனா காய்ச்சலுக்கு புதிதாக சுமார் 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 5 பேர் பலியாகி இருப்பதாகவும் வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்த போது, ‘கொரோனா வைரஸ் தொற்று கணிசமான அளவில் குறைந்திருந்தாலும் கடந்த 2 நாட்களில் மட்டும் மீண்டும் 45 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பரவி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மீண்டும் சீனாவில் கட்டுப்பாடுகள் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
 

More News

காவல்துறைக்கு விஜய் ரசிகர்கள் செய்த உதவி: நன்றி கூறிய துணை கமிஷனர்

தமிழகத்திலும் சரி, நமது அண்டை மாநிலங்களாக இருந்தாலும் சரி, இயற்கை பேரிடர் நேரிடும் போதெல்லாம் முதல் ஆளாக களத்தில் இறங்கி சமூக சேவை செய்து வருபவர்கள் தளபதி விஜய்யின் ரசிகர்கள்

வருத்தப்பட்ட காதலிக்கு ஆறுதல் கூறிய நடிகர் விஷ்ணு விஷால்

இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருவதை அடுத்து இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் தற்போது வீட்டில் முடங்கி கிடக்கின்றனர்.

ராமாயணம், மகாபாரதத்தை அடுத்து 'சக்திமான்'. விரைவில் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளததை அடுத்து இந்தியர்கள் 130 கோடி பேர்களும் தற்போது வீட்டில் முடங்கி கிடக்கின்றனர்

5000 விண்ணப்பங்களில் 10 பேர்களுக்கு மட்டுமே அவசர கால அனுமதி: காவல்துறை

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவசர விசயமாக வெளியூர் அல்லது வெளி மாநிலம் செல்ல விரும்புபவர்கள்

பிடித்து வந்த மீன்களை மீண்டும் கடலில் போடும் மீனவர்கள்!

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் இன்று ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது