கிணற்றில் விழுந்த குண்டு மனிதர்: தொப்பையால் உயிர் தப்பித்த அதிசயம்
கிணற்றில் தவறி விழுந்த குண்டு மனிதர் ஒருவர் தொப்பையால் உயிர் தப்பிய அதிசயம் சீனாவில் நடந்துள்ளது
சீனாவை சேர்ந்த குண்டு மனிதர் ஒருவர் தனது வீட்டில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டார். கிணற்றின் மீது மூடி வைக்கப்பட்டிருந்த பலகை மேல் அவர் கால் வைத்ததும், அவரது உடல் எடை தாங்காமல் திடீரென பலகை உடைந்தது. இதன் காரணமாக அவர் கிணற்றில் விழுந்தார்.
ஆனால் அவரது தொப்பை அவரை கிணற்றுக்குள் விழ விடாமல் பாதியில் தடுத்து கொண்டது. இதனால் தொப்பை மட்டும் கிணற்றுக்கு மேலே சிக்கி கொண்டது. அவரது குடும்பத்தினர்களும் அவரை மேலே இழுக்க முயற்சித்து தோல்வி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து அவரது தொப்பை வயிறு ஆகிய பகுதிகளை கயிறு கட்டி மொத்தம் 8 பேர் சேர்ந்து அவரைத் தூக்கினார்கள். இதனை அடுத்து அவர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார். இது குறித்து தீயணைப்பு துறையினர் கூறியபோது ’அவரது தொப்பை மட்டுமே அவருடைய உயிரை காப்பாற்றியுள்ளது என்றும் தொப்பை மட்டும் இல்லாமல் இருந்தால் அவர் அந்த சிறிய கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்திருப்பார் என்றும் தெரிவித்தனர்
கிணற்றில் தவறி விழுந்த ஒருவர் தொப்பையால் உயிர் தப்பிய அதிசயம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது