close
Choose your channels

அவர் மீது உடனே நடவடிக்கை எடுங்கள்: தமிழக முதல்வருக்கு சின்மயி வேண்டுகோள்..!

Tuesday, May 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வைரமுத்துவுக்கு எதிராக 17 பெண்கள் இதுவரை பாலியல் புகார் கொடுத்துள்ளனர் என்றும் எனவே அவர் மீது தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் என்றும் பாடகி சின்மயி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டுகோள் எழுப்பி உள்ளார்.

இது குறித்து பாடகி சினிமாவில் டுவிட்டர் பக்கம் மூலம் கூறி இருப்பதாவது: பாலியல் குற்றச்சாட்டுகள் எழும் போது ஒவ்வொரு முறையும் நீங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். இந்தியா முழுவதும் இது போல் பெண்கள் பாதிக்கப்படும்போது அவர்கள் பக்கம் நிற்கிறீர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பேசும்போது மாற்றம் வரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது ஆனால் பாலியல் சுரண்டல்கள் தொல்லைகள் குறைந்தபாடில்லை

போக்சோ போன்ற சட்டங்கள் இருந்தாலும் அனைத்து துறையிலும் பாலியல் குற்றச்சாட்டு இருந்து கொண்டு தான் உள்ளது. குறிப்பாக திரைத்துறையில் பாலியல் குற்றங்கள் இன்றும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

உங்கள் நண்பர், ஆதரவாளரான கவிஞர் வைரமுத்து மீது 17 க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகாரளித்தும், உங்கள் அருகாமையில் அவர் மகிழ்ச்சியுடன் தான் இருக்கிறார். இதனால் அவர் குறித்து மேலும் பெண்கள் பேச முடியாத நிலை உள்ளது.

தமிழகத்தில் உங்கள் கட்சி அவரை தொடர்ந்து முன்னிலைப்படுத்துகிறது. கிட்டத்தட்ட தமிழ் திரைத்துறையில் 5 ஆண்டுகள் வேலை செய்ய தடையுடன், நகரின் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடி வருகிறேன். அதற்கு ஒரு முடிவு கிடைக்குமா? என்று தெரியவில்லை. இன்னும் 20 ஆண்டுகள் கூட இந்த வழக்கு முடிய ஆகும் என்றாலும் எனக்கு அதை எதிர்கொள்ள பலம் உள்ளது. இந்த நாட்டில் அரசியலில் எந்த தொடர்பும் இல்லாத ஒருவருக்கு நியாயம் கிடைக்க இத்தனை நாட்கள் ஆகும்.


நான் தேசிய பெண்கள் கவுன்சிலில் 2018-19-ம் ஆண்டுகளில் புகார் அளித்து விட்டேன். ஏனெனில் எங்களை போன்றவர்களுக்கு இது மட்டும் தான் ஒரே வழி. எழுத்துப்பூர்வமான புகாரை போலீஸ் அதிகாரிகளுக்கு அளித்தேன். அது வீட்டிற்கு புலனாய்வுக்கு வந்தது. என்னிடம் போதிய ஆதாரங்கள் உள்ளன. சமாதானத்திற்காக அவர்கள் அழைத்தது, அவர்களின் போன் கால்கள் என போதிய ஆதாரங்கள் வைத்துள்ளேன்.

அவரது மகன் மதன் கார்க்கிக்கு குறுஞ்செய்தி வழியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்துள்ளார். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அவரது தந்தையின் நடத்தை சில ஆண்டுகளுக்கு முன்னரே தெரியும் என்று அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

பிரிஜ் பூஷணுக்கும், வைரமுத்துவுக்கு விதிகள் வேறு வேறு கிடையாது. நமது நாட்டின் சாம்பியன்கள், மல்யுத்த வீரர்கள், நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்கள் பிரிஜ் பூஷன் பெயரைக் கூறியுள்ளார்கள். அதேபோல் தான் 17 க்கும் மேற்பட்ட பெண்கள் வைரமுத்துவின் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.


உங்களுக்கும், உங்கள் கட்சிக்கு மிக நெருக்கமாக உள்ள அவர் என்னையும் மற்ற பெண்களையும் அடக்க முயல்கிறார். பெண்களின் திறமைகள், கனவுகளை இதற்காக காவு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. எங்கள் அனைவரின் திறமையை விட அவரது திறமை பெரிது அல்ல. இது உங்கள் கண் எதிரே நடக்கிறது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுங்கள்.

அப்போதுதான், தமிழ்நாட்டில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும். எனது துறையில் இது போன்றவர்கள் இனி வரக்கூடாது என்பதற்காக நான் பேசுகிறேன். ஆனால், அவரால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் அவரது அரசியல் தொடர்புகளுக்காக வெளியே பேச பயப்படுகிறார்கள்.

எனது திரைத்துறையில் போக்சோ, ஐசிசி உள்ளிட்ட அமைப்புகள் சரியாக செயல்பட தயவுசெய்து ஆவண செய்யுங்கள். எனது ஊடகத்தில் பெண் குழந்தைகள் எல்லாம் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுங்கள். எங்கள் துறையில் அனைத்து இடங்களிலும் பாலியல் அத்துமீறல்களை தடுக்க வழிவகை செய்யுங்கள்.

தொலைக்காட்சி மற்றும் திரைத்துறையில் பெண்கள் மற்றும் ஆண்கள் தொடர்ந்து பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். குழந்தைகள் நிகழ்ச்சியை டிவியில் தொகுத்து வழங்கிய போது ரமேஷ் பிரபா குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அவரது பெயரும் வெளியானது. எனவே அனைத்துக்கும் ஆவண செய்ய வேண்டும்’’

இவ்வாறு பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.