சிரஞ்சீவியின் அடுத்த படத்திற்கு அஜித் பட டைட்டில்!

  • IndiaGlitz, [Saturday,August 21 2021]

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு அஜித் பட டைட்டில் வைக்கப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அஜித் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’வரலாறு’. இந்த படத்திற்கு முதலில் ’காட்ஃபாதர்’ என்ற டைட்டில் தான் வைக்கப்பட்டு இருந்தது என்பதும் அதன்பின் வரலாறு என்று டைட்டில் மாற்றப்பட்டது என்பதும் தெரிந்ததே. மேலும் ’வரலாறு’ படத்தின் கன்னட ரீமேக் டைட்டில் ’காட்ஃபாதர்’ என்றுதான் வைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்திற்கு ’காட்ஃபாதர்’ இந்த டைட்டில் உறுதி செய்யப்பட்டு சற்று முன் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான மோகன்லாலின் ’லூசிபர்’ திரைப்படத்தின் ரீமேக் படமான இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்குகிறார். தமன் இசையில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும், இந்தப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தமிழ், தெலுங்கில் 'தளபதி 67'? ஆச்சரியப்பட வைக்க்கும் அப்டேட்டுக்கள்!

தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படமான 'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் சென்னையில் நடைபெற்று வரும் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன்

சின்னத்தம்பி குஷ்பூ ரிட்டர்ன்ஸ்.....! வைரலாகும் செல்பி புகைப்படம்.....!

நடிகை குஷ்பூ தனது லேட்டஸ்ட் செல்பி புகைப்படத்தை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

விவாகரத்து வதந்திக்கு பண்ணை வீட்டின் மூலம் பதிலடி கொடுத்த சமந்தா!

நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்யப் போகிறார் என சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவிய நிலையில் அந்த வதந்திக்கு தனது பண்ணை வீடு ஒன்றின் மூலம் சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.

பிரபல நடிகையுடன் டேட்டிங் செல்லும் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்!

பிரபல நடிகை ஒருவருடன் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் டேட்டிங் செய்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மருமகள் மீது பேராசை.....! மாமனார் கொலையான கொடூரம்...!

பாலியல் தொல்லை கொடுத்து வந்த மாமனாரை,  மருமகள் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.