close
Choose your channels

தமிழ், தெலுங்கில் 'தளபதி 67'? ஆச்சரியப்பட வைக்க்கும் அப்டேட்டுக்கள்!

Saturday, August 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் சென்னையில் நடைபெற்று வரும் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் படக்குழுவினர் விரைவில் ரஷ்யா செல்ல உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ’தளபதி 66’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்க இருப்பதாகவும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கிட்டத்தட்ட செய்திகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திரைப்படத்திற்காக விஜய்க்கு ரூபாய் 100 கோடிக்கு மேல் சம்பளம் வழங்கப்படவுள்ளதாகவும் தென்னிந்திய திரை உலகில் ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் உயர்ந்துவிட்டார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ’தளபதி 66’ படத்தை தொடர்ந்து ’தளபதி 67’ திரைப்படமும் தமிழ் தெலுங்கில் தான் தயாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ’மகதீரா’ உள்ளிட்ட பிரம்மாண்டமான படங்களை தயாரித்த கீதா ஆர்ட்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் விஜய்க்காக ஒரு ஆக்ஷன் கதையை இந்த நிறுவனம் தயார் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’தளபதி 67’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ், மகிழ்திருமேனி, தேசிங்கு பெரியசாமி ஆகியோர்களில் ஒருவர் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மொத்தத்தில் தளபதி விஜய்யின் அடுத்தடுத்த படங்களில் தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருப்பதை பார்க்கும் போது இனி விஜய்யின் அனைத்து படங்களும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் - இந்தியா திரைப்படமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.