விக்ரமின் 'சியான் 62' படத்தின் டைட்டில் இதுதான்.. மாஸ் போஸ்டர் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Wednesday,April 17 2024]

விக்ரம் நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சியான் 62’ படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சியான் விக்ரம் ஏற்கனவே நடித்த ’தங்கலான்’ மற்றும் ’துருவ நட்சத்திரம்’ திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் அவர் ’சித்தா’ இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கு ’வீர தீர சூரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டைட்டிலில் 'வீர தீர சூரன் பார்ட் 2’ என்று பதிவு செய்யப்பட்டுள்ளதால் பார்ட் 1 என்ன ஆனது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு விரைவில் படக்குழுவினர் பதில் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிவி பிரகாஷ் இசையில் , ஷிபு தமீன் தயாரிப்பில், பிரசன்னா படத்தொகுப்பில், எஸ் பாலச்சந்தர் கலை இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் விக்ரமின் பிறந்த நாளில் வெளியாகியுள்ளதை அடுத்து ரசிகர்கள் இந்த போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர்.

விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ராம நவமி அதிசயம்: அயோத்தியில் ராமரின் நெற்றியில் சூரிய ஒளி!

ராம நவமி தினத்தன்று அயோத்தியில் அற்புதமான நிகழ்வு ஒன்று நடந்தது. புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயிலில், பால ராமரின் நெற்றியில் சூரிய ஒளி நேரடியாக விழுந்தது.

ஸ்ரீ ராம நவமி: ராமரின் 16 குணங்கள், அவதாரங்கள், பாலம் கட்டிய கதை! - திருமதி. U.E.சிந்துஜா

இந்த ஸ்ரீ ராம நவமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது! ஏனெனில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டிய பிறகு நடக்கும் முதல் ராம நவமி இது

அல்சைமர்ஸ் நோயை ஆரம்பத்திலேயே அறிந்து கொள்வது எப்படி ?

அல்சைமர்ஸ் நோய் என்பது மூளை நரம்பியல் பிரச்சினை ஆகும்.இதில் மூளையில் உள்ள செல்கள் இறப்பதால் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சி ஏற்படுகிறது...

தேர்தலில் போட்டியிடும் பிரபல தமிழ் நடிகருக்கு நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி..!

பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் பிரபல நடிகர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது திடீரென நெஞ்சுவலி வந்ததாகவும் இதையடுத்து அவர் மருத்துவமனையில்

முதல் பட நடிகையிடம் இருந்து வந்த வாழ்த்து.. சித்தார்த்தின் சந்தோஷத்தை பாருங்க.. வைரல் வீடியோ..

நடிகர் சித்தார்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் தனது முதல் பட நடிகையிடம் இருந்து வந்த வாழ்த்து குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.