close
Choose your channels

விக்ரமின் 'சியான் 62' படத்தின் டைட்டில் இதுதான்.. மாஸ் போஸ்டர் ரிலீஸ்..!

Wednesday, April 17, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சியான் 62’ படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சியான் விக்ரம் ஏற்கனவே நடித்த ’தங்கலான்’ மற்றும் ’துருவ நட்சத்திரம்’ திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் அவர் ’சித்தா’ இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கு ’வீர தீர சூரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டைட்டிலில் 'வீர தீர சூரன் பார்ட் 2’ என்று பதிவு செய்யப்பட்டுள்ளதால் பார்ட் 1 என்ன ஆனது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு விரைவில் படக்குழுவினர் பதில் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிவி பிரகாஷ் இசையில் , ஷிபு தமீன் தயாரிப்பில், பிரசன்னா படத்தொகுப்பில், எஸ் பாலச்சந்தர் கலை இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் விக்ரமின் பிறந்த நாளில் வெளியாகியுள்ளதை அடுத்து ரசிகர்கள் இந்த போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர்.

விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.