close
Choose your channels

'சியான் 62' படத்தின் நாயகி இவர்தான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Wednesday, April 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’சியான் 62’ படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விக்ரம் நடித்த முடித்துள்ள ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவன் நடித்த ’தங்கலான்’ திரைப்படமும் ரிலீஸ் க்கு தயாராக உள்ளது என்பதும் தேர்தல் முடிந்ததும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் விக்ரம் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை ’சித்தா’ இயக்குனர் அருண்குமார் இயக்கவுள்ள நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம். விக்ரம் உடன் எஸ்ஜே சூர்யா முக்கிய இடத்தில் நடிக்க இருக்கும் இந்த படத்தை ஷிபுதமீன் தயாரிக்க இருக்கிறார் என்பதும் ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பா ரஞ்சித்தின் ‘சார்பாட்டா பரம்பரை’ படத்தில் மாரியம்மாள் என்ற கேரக்டரில் சூப்பராக நடித்த துஷாரா விஜயன், அதன் பிறகு ’நட்சத்திரம் நகர்கிறது’ ‘அநீதி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் ரஜினியின் ’வேட்டையன்’ மற்றும் தனுஷின் ’ராயன் படங்களில் நடித்து வரும் நிலையில் ’சியான் 62’ படத்திலும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment