விஜய் நடிக்க வேண்டிய படத்தில் விக்ரம் நடிக்கின்றாரா?

  • IndiaGlitz, [Saturday,December 04 2021]

தளபதி விஜய் நடிக்க வேண்டியது திரைப்படத்தில் சியான் விக்ரம் நடிக்க இருப்பதாக கோலிவுட்டில் தகவல் கசிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது என்பதும், இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் கதையை முதலில் தளபதி விஜய்க்கு பா ரஞ்சித் கூறி இருந்ததாகவும் அந்தக் கதையில்தான் தற்போது விக்ரம் நடிக்க இருப்பதாகவும் கோலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருகிறது.

ஏற்கனவே விக்ரம் நடித்த ’தூள்’ படத்தில் முதலில் விஜய் நடிக்க இருந்தார் என்பதும் அதன் பின் திடீரென அவர் ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்கவில்லை என்பதால் விக்ரம் நடித்தார் என்பதும் அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மீண்டும் விஜய் நடிக்க வேண்டிய ஒரு படத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் நிலையில் இந்த படமும் சூப்பர் ஹிட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

தனுஷ்-செல்வராகவனின் 'நானே வருவேன்' படத்தின் சூப்பர் அப்டேட்!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் சினிமாவில் கேப்டன் விஜயகாந்த்: ரசிகர்கள், தொண்டர்கள் உற்சாகம்!

தமிழ் திரை உலகில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்ற இரண்டு ஆளுமையான நடிகர்கள் இருந்தபோதே விஜயகாந்த் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தார் என்பதும் அவரது படங்கள் ஏராளமானவை வெற்றி பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்க பொண்ணு காதலிச்சு ஏமாத்திட்டா… 71/2 லட்சம் கொடுங்க… பெற்றோரிடம் கேட்ட இளைஞர்!

விசித்திரத்திற்கு பஞ்சம் இல்லாத சமூக வலைத்தளங்களில் அவ்வபோது சில பதிவுகள் மேலும் வைரலாகி அது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி விடுகிறது.

டிஸ்சார்ஜ் ஆனார் கமல்ஹாசன்: பிக்பாஸ் செட்டுக்கு செல்கிறாரா?

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

'இந்தியன் 2' படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் இந்த பிரபல நடிகையா?

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ,லைக்கா நிறுவனத்தின் சுபாஸ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான திரைப்படம் 'இந்தியன் 2'.