close
Choose your channels

சீயான் விக்ரம் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு: பூஜை புகைப்படங்கள் வைரல்!

Saturday, July 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விக்ரம் நடித்த ’கோப்ரா’ திரைப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் அதனை அடுத்து அவர் நடித்து முடித்துள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே. மேலும் விக்ரம் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’துருவ நட்சத்திரம்’ திரைப்படமும் விரைவில் ரிலீசாக உள்ளது

இந்த நிலையில் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் பூஜை இன்று நடந்துள்ளது. விக்ரமின் 61 வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்க உள்ளார். ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளது

ஜிவி பிரகாஷ் இசையில், கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா படத்தொகுப்பில் மூர்த்தி கலை இயக்கத்தில் இந்த படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இன்று இந்த படத்தின் பூஜை நடைபெற்றதை அடுத்து விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.