போலீஸ் உடையணிந்து சினிமா பாணியில் கொள்ளை அடித்த திருடர்கள்… காவல் துறையின் அதிரடி!

  • IndiaGlitz, [Friday,January 22 2021]


 

கன்னியாக்குமரி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனத்தை வழிமறித்து சிலர் போலீஸ் உடையணிந்து கொண்டு ரூ.80 லட்சம் பணத்தை கொள்ளை அடித்த சம்பவம் தமிழகத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தமிழ்நாடு போலீஸ் வெறும் பதினைந்து மணி நேரத்தில் கண்டுபிடித்து பொது மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளனர்.

கன்னியாக்குமரி நொய்யாற்றின் அருகே செயல்பட்டு வரும் நகைக் கடையின் உரிமையாளர் சம்பத். இவர் தங்க நகைகளை கேரள நகை வியாரிகளுக்கு மொத்தமாக விற்று வருகிறார். இப்படி விற்பனைக்காக கேரளாவிற்கு சென்ற சம்பத் கடந்த செவ்வாய்கிழமை கேரளாவில் இருந்து கன்னியாக்குமரிக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாகத் திரும்பி வந்து இருக்கிறார். இந்நிலையில் சம்பத் வந்த சொகுசு காரை மற்றொரு சொகுசு கார் வழிமறித்து நின்று இருக்கிறது.

அந்தக் காரில் இருந்து போலீஸ் உடையணிந்த 4 பேர் இறங்கி உள்ளனர். மேலும் சம்பத்தின் காரை சோதனை இட வேண்டும் எனக் கூறிய அவர்கள் சம்பத்திடம் இருந்த ரூ. 76 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதையடுத்து பதறிப்போன சம்பந்த் காவல் துறையிடம் புகார் அளித்து உள்ளார். சம்பத்திடம் இருந்து விவரங்களைப் பெற்றுக்கொண்ட காவல் துறை இதற்காக 4 பேர்க்கொண்ட தனிப்படையை அமைத்து தேடுதல் வேட்டையை நடத்தி இருக்கிறது.

பின்பு சிசிடிவி காட்சிகள், காரின் பதிவு எண் போன்வற்றை வைத்து விசாரணை நடத்திய போலீசார், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பதுங்கி இருந்த கோபக்குமார், சுரேஷ்குமார், கண்ணன், ராஜேஷ் குமார், மனு என்ற சஜின் குமார் ஆகியோரை கைது செய்து உள்ளனர். மேலும் மனு என்ற சஜின் குமர் சம்பத்தின் கடையில் வேலை செய்து வருகிறார் என்பதும் அவர்தான் இக்கொள்ளை சம்பவத்திற்கு திட்டம் வகுத்து கொடுத்து இருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் போலீசாரின் இத்தகைய அதிரடி செயலுக்குப் பொது மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

More News

இந்தியாவில் சல்யூட் பல ரகம்… வித்தியாசம் தெரியுமா?

இந்தியா மட்டுமல்ல உலகத்தின் அனைத்து நாடுகளிலும் சல்யூட் வைக்கும் முறை கடைப்பிடிக்கப் படுகிறது.

சசிகலா குணமடைய வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர்!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்று வந்த சசிகலா, இம்மாதம் 27ஆம் தேதி விடுதலை ஆவார் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது 

இதை மட்டும் செய்ய மாட்டேன்: ஸ்போர்ட்ஸ்மேன் மட்டுமல்ல ஜெண்டில்மேன் என நிரூபித்த ரஹானே!

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் பயணம் செய்த நிலையில் கடைசியாக முடிந்த 4 டெஸ்ட் போட்டிகளில் இரண்டில் வென்று இந்திய அணி தொடரை வென்றுள்ளது.

'மாஸ்டர்' ஓடிடி ரிலீஸ் எப்போது?

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியானது என்பதும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே

ஏன் இப்படி? பிக்பாஸ் லாஸ்லியா புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா அந்த சீசனில் மிகப்பெரிய புகழ் பெற்றார் என்பதும் அவருக்கு சமூக வலைதளங்களில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் குவிந்தது என்பதும் தெரிந்ததே.