close
Choose your channels

சசிகலா குணமடைய வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர்!

Friday, January 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்று வந்த சசிகலா, இம்மாதம் 27ஆம் தேதி விடுதலை ஆவார் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் திடீரென கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும், அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் நுரையீரல் தொற்று, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதி இருப்பதாகவும் அது மட்டுமின்றி கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாகவும் மருத்துவமனை நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது

இதனை அடுத்து சசிகலா தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சசிகலா விரைவில் குணமாக வேண்டும் என திமுக எம்பி கனிமொழி உள்பட பல அரசியல்வாதிகள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்

அந்த வகையில் தற்போது இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் தனது வலைதள பக்கத்தில் சசிகலா விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவு செய்த டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கொரானா பாதிப்பால் உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதிப்புக்குரிய திருமதி. சசிகலா அவர்கள் பூரண நலம்பெற வேண்டுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.