மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

உடல்நலக் குறைவு காரணமாக நேற்று சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து அவருக்கு குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் இதனால் அடுத்த 3 நாட்களுக்கு மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறுவார் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில்  சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிகிச்சை முடிந்து இன்று டிச்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் சிகிச்சையின் போது அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டதாகவும் அந்தப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானதாகவும் கூறப்பட்டு உள்ளது.

இதையடுத்து குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட தமிழக முதல்வர் இன்று வீடு திரும்பியுள்ளார். மேலும் அவரை தொடர்ந்து 3 நாட்களுக்கு வீட்டில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More News

தமிழகத்தில் டாஸ்மாக் செல்ல 15 கட்டளைகள்… என்னென்ன?

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க இரவுநேர ஊரடங்கு, வெளியூர்- வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு இரவு நேரத்தில் வரத் தடை,

வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளது...! சத்யபிரதா சாகு....!

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளது தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார். 

புரசைவாக்கம் சரவணா ஸ்டோர் மூடல்… 39 பேருக்கு கொரோனா பாதித்ததாகத் தகவல்!

சென்னை புரசைவாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் சரவணா ஸ்டோர் கடையில் வேலைப் பார்த்த 39 ஊழியர்களுக்கு கொரோனா நோய்ப்பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

கொரோனா பாதித்த பெண்ணிற்கு ஆட்டோவில் சிகிச்சை… மனதை உருக்கும் வீடியோ!

இந்தியாவில் கொரோனா தற்போது தீவிரம் அடைந்து இருப்பதை ஒட்டி பிரதமர் நரேந்திர முக்கிய மருந்து நிறுவனங்கள் மற்றும் மருத்துவர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தம்பதிகளே அந்த விஷயத்தை தள்ளி போடுங்க.....!அட்வைஸ் செய்யும் பிரேசில் அரசு....!

பிரேசில் அரசு இளம் தலைமுறையினருக்கு அட்வைஸ் ஒன்றை தந்துள்ளது.