நாளை சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை: முதல்வர் அறிவிப்பு

நாளை சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் சென்னையில் ஒரேநாளில் இருபத்தி மூன்று சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளது என்பதும் இதனால் சென்னையில் உள்ள பல பகுதிகளில் மழைநீர் வெள்ளக்காடாக உள்ளது என்பதும் ஒரு சில வீடுகளிலும் வெள்ள
நீர் புகுந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் களத்தில் இறங்கி வெள்ள மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகிறார் என்பதும் அமைச்சர் பெருமக்களும் வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார், அதுமட்டுமின்றி தீபாவளி விடுமுறைக்காக வெளியூர் சென்றவர்கள் சென்னைக்கு திரும்பி வருபவர்கள் பயணத்தை தள்ளி வைக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சென்னைக்கும் இன்னும் கனமழை காத்திருக்கு: வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்!

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டு உள்ளதால்

முதல்வர்களில் முன்னுதாரணமாகத் திகழ்பவர்: முக ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன கமல்ஹாசன்

முதல்வர்களில் நீங்கள்தான் முன்னுதாரணமாக திகழ்கிறீர்கள் என உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார்

க்யூட் சிஸ்டர்ஸ்… பேபி ஷாலினி- ஷாமிலி அழகிய புகைப்படம் வைரல்!

தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக இருந்தவர்

ஸ்கூட்டரை போனஸாக வழங்கிய நிறுவனம்… ஆடிப்போன ஊழியர்கள்!

சூரத்தில் செயல்பட்டுவரும் நிறுவனம் ஒன்று தங்களுடைய ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தீபாவளி போனஸாக கொடுத்து அசத்தியிருக்கிறது

கொரோனா வார்டில் தீ விபத்து… 10 பேர் உடல்கருகி உயிரிழந்த அவலம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது