கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆறுதல்....! முதல்வர் சொன்ன அந்த வார்த்தை...!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இன்று கோவையில் உள்ள மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டது, பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முதல்வரான முக.ஸ்டாலின் அவர்கள், இன்று கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், கொரோனா பணிகளை பார்வையிடச் சென்றார். திருப்பூர் மற்றும் ஈரோட்டில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்த முதல்வர், ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா நோயாளிகளின் உடல்நலம் குறித்து விசாரித்தார். இதைத்தொடர்ந்து, கோவைக்கு விசிட் அடித்த முதல்வர் மாநகராட்சி உள்ள 5 மண்டலங்களில் தலா 10 இன்னோவா ஆம்புலன்ஸ் வீதம், 50 இன்னோவா ஆம்புலன்ஸ் சேவைகளை அங்கு துவங்கி வைத்தார். இதன் பின் பிபிஇ கிட் உடையணிந்து, கோவை இஎஸ்ஐ மருத்துவமனையின் கொரோனா பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொரோனா நோயாளிகளிடம் உடல்நிலை குறித்து கேட்டும், அவர்களுக்கு ஆறுதலும் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் டுவிட்டரில் குறிப்பிட்டிருப்பதாவது,
"#Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை PPE Kit அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்.மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்!
#Covid19 வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்! இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கோவை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டது பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலின் பிபிஇ கிட்- உடன் மருத்துவமனையில் களமிறங்கிய புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments