ஐடி வேலைக்கு பதில் ஆன்லைனில் கீரை விற்பனை: கோவை இளைஞரின் சாதனை
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐடி அலுவலகத்தில் பணிபுரிந்த கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஐடி பணியை உதறிவிட்டு ஆன்லைனில் கீரை விற்பனையில் சாதனை புரிந்து வருகிறார்
தற்போதைய ஆன்லைன் உலகில் குண்டூசி முதல் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஆன்லைனில் வாங்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் லட்சக்கணக்கில் சம்பளம் கிடைக்கும் ஐடி வேலையை உதறிய கோவையை சேர்ந்த ஸ்ரீராம் பிரசாத் என்ற இளைஞர் 'கீரைக்கடை.காம் என்ற பெயரில் ஆன்லைன் மூலம் கீரைகளை விற்பனை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி ஒவ்வொரு கீரையின் மருத்துவ குணம் குறித்தும் அவர் தனது இணையதளத்தில் விரிவாக விளக்கியுள்ளார்.
விவசாயத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் தனது நிலத்தில் விளையும் கீரைகள் மட்டுமின்றி அருகில் உள்ள ஊர்களில் விளையும் கீரைகளையும் நல்ல விலை கொடுத்து வாங்கி நேரடியாகவும், ஆன்லைன் மூலம் கீரைகளை ஆர்டர் எடுத்து டோர் டெலிவரியும் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி விவசாயிகளின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் கீரை விவசாயம் செய்து, வரும் லாபத்தில் நில உரிமையாளர்களுக்கு பங்கும் கொடுக்கின்றார்.
தற்போது சுமார் 40 வகையான கீரைகளை விற்பனை செய்து வரும் ஸ்ரீராம் பிரசாத், எதிர்காலத்தில் 100 வகையான கீரைகளை விற்பனை செய்வதும், தென்னிந்திய அளவில் பல கிளைகளை உருவாக்குவதும் தான் தனது கனவு என்கிறார். அவரது கனவு நனவாக மனதார வாழ்த்துவோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments