close
Choose your channels

பனிப்போர் - அதிபர் ட்ரம்ப்பின் உரை நகலைக் கிழித்த சபாநாயகர் நான்சி

Thursday, February 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பனிப்போர் - அதிபர் ட்ரம்ப்பின் உரை நகலைக் கிழித்த சபாநாயகர் நான்சி

 

 
கடந்த 2018 இல் அமெரிக்க அதிபர் டரம்ப்க்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதில் முக்கிய காரணமாக இருந்தவர் அந்நாட்டு சபாநயாகர் நான்சி பெலோசி. இதனால் நான்சிக்கும் அதிபர் ட்ரம்புக்கும் இடையே கடும் பனிப்போர் நிலவியதைப் பல்வேறு சம்பவங்களில்  வெளிப்படையாகப் பார்க்க முடிந்தது.
 
முன்னதாக அதிபர் பதவியில் வெற்றிப் பெறுவதற்காக ட்ரம்ப் வெளிநாடுகளின் உதவியை நாடியதாக அந்நாட்டின் எதிர்க் கட்சிகள் அவர் மீது குற்றம் சாட்டி இருந்தன. இந்தக் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப் பட்ட நிலையில் அவர் மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் செனட் சபையில் அதிக வாக்குகளைப் பெற்ற ட்ரம்ப் தனது பதவியைத் தக்க வைத்துக்கொண்டார். 
 
அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, அதிபர் ட்ரம்ப், தன் மீது வீண் பழி சுமத்துகிறார்கள் எனக் குற்றம் சாட்டினார். மேலும், பதவி நீக்கத் தீர்மானத்திற்கு காரணமான நான்சியைக் குறித்து தன் ட்விட்டர் பதிவில் “பதற்றமான நான்சி” “பைத்தியக் கார நான்சி” என்று விமர்சனம் செய்திருந்தார். இருவருக்கும் இடையே இருந்த பனிப் போர் தற்போது உச்சத்தை எட்டியிருக்கிறது. 


 
ஒவ்வொரு வருடமும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் State of union கூட்டத்தொடர் நடைபெறுவது வழக்கம். இந்தக் கூட்டத்தில் அந்த ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை, திட்டங்கள் போன்றவை பற்றிய விளக்கங்களை அதிபர் வழங்குவார். இந்த ஆண்டிற்கான கூட்டத்தில் உரையாற்ற வந்த ட்ரம்ப் முதலில் தனது உரையின் நகலை நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கினார். 
 
முதலில் சபாநாயகர் நான்சிக்கு அவை குறிப்பினை வழங்கினார் ட்ரம்ப். உரை நகலை பெற்றுக்கொண்ட நான்சி அதிபருக்கு கைக்கொடுக்க முயற்சி செய்தார். ஆனால் ட்ரம்ப் அதனைப் பொருட்படுத்தாது முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்கிறார். அவையில் அதிபருக்கு பின் இருக்கையில் நான்சியும், குடியரசு கட்சித் தலைவரும் அமர்ந்திருந்தனர். அதிபர் தன்னைப் பற்றி புகழும் போதெல்லாம் குடியரசு கட்சியினர் எழுந்து கைத்தட்டி ஆரவாரம் செய்து கொண்டிருந்த நிலையில் அதிபரின் பேச்சு முடிந்தவுடன் சபாநாயகர் நான்சி எழுந்து அதிபரின் உரை நகலை கிழித்து விட்டார். இது உறுப்பினர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இதைக் குறித்து, சபாநயகர் நான்சியிடம் கேட்டபோது,  “வேலை தொடர்பான விஷயத்தில் இருக்கும் மனக் கசப்பை நட்பில் காட்டக் கூடாது, நட்பு வேறு வேலை வேறு. மாற்று வழிகளைக் கருத்தில் கொண்டு நான் இதை செய்தேன்“ என்று கூறினார். தற்போது இந்த விவாகரம் அரசியல் மட்டத்தில் மிகவும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.