close
Choose your channels

ரஷ்ய அதிபர் புடினின் ரகசிய காதலி தலைமறைவா? வைரலாகும் புதுத் தகவல்!

Friday, March 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஷ்யா, உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை தொடர்ந்து நடத்திவருகிறது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு மற்றும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. ஆனாலும் ரஷ்ய அதிபர் புடின் தனது முடிவில் இருந்து சிறிதும் பின்வாங்காமல் இருக்கிறார். இதனால் உலக மக்கள் புடின் மீது தங்களது எதிர்ப்புணர்ச்சியை காட்டத் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் அதிபர் புடினின் ரகசிய காதலி அலினா கபேவா அதிபருக்குப் பிறந்த குழந்தைகளுடன் சுவிட்சர்லாந்தில் பதுங்கி இருப்பதாகவும் அவரை கைது செய்வதற்கு உலக நாடுகள் திட்டம் தீட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான கபேவா பழைய சோவியத் யூனியன் நாடான உஸ்பெக்கில் கடந்த 1983 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இவருடைய தந்தைய முன்னாள் கால்பந்து வீரர் கபேவா என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரஷ்யா சார்பாக அலெனா கடந்த 2000இல் சிட்னி ஒலிம்பிக் போட்டியல் ஜிம்னாஸ்டிக் பிரிவில் வெண்கலப் பதக்கமும் கடந்த 2004 இல் ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் ரித்மிக் ஜிம்னாஸ்டிக் பிரிவில் தங்கப்பதக்கமும் வென்றுள்ளார். இவர் ரஷ்ய அதிபர் புடினுடன் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இருந்ததுபோன்ற பல புகைப்படங்கள் இதற்கு முன்பே செய்தித்தாள்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அலென்கி நவல்ன்கி உருவாக்கிய ஊழலுக்கு எதிரான அமைப்பு, அலினா கபேவா குறித்தும் அவரது தந்தை கபேவா குறித்தும் பல்வேறு தகவல்களை ஆராய்ந்து வெளியிட்டு இருந்தது. அதாவது ரஷ்யாவின் அரசு ஊடகமான நேஷனல் மீடியா இயக்குநர் குழுவில் ஒருவராக இருந்துவரும் கபேவாவிற்கு 10 மில்லியன் டாலர்கள் சம்பளம் வழங்கப்படுகிறது என்றும் கபேவா குடும்பத்திற்கு அவர்களது சொந்த ஊரில் பல தொழில் முனேவோர்கள் சொத்து மற்றும் பல விலைமதிப்பற்ற பரிசுகளை கொடுத்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

உக்ரைன் போர் தீவிரம் அடைந்திருக்கும் இந்தச் சமயத்தில் அலினா கபேவாவிற்கும் அதிபர் புடினுக்கும் பல குழந்தைகள் பிறந்துள்ளார்கள் என்றும் இவர்கள் அனைவரும் தற்போது சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள அல்தாய் மலைப் பள்ளத்தாக்கில் இருக்கும் சொகுசு பங்களாவில் பதுங்கியிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் சர்வதேச அளவில் இவர்களைக் கைது செய்வதற்கு மனு பிறப்பிக்கப்பட்டு இதற்காக சுவிட்சர்லாந்து அரசிடம் உதவிக் கோரப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.