நடுரோட்டில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை: காதல் தோல்வியா?

  • IndiaGlitz, [Wednesday,November 20 2019]

கோவையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த 19 வயது சினேகா என்ற இளம்பெண், கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரி ஒன்றில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் சினேகா சமீபத்தில் ஊருக்குச் சென்று தனது பெற்றோரை பார்த்து விட்டு இன்று விடிகாலை ஹாஸ்டலுக்கு திரும்பியுள்ளார்.

ஹாஸ்டலுக்கு திரும்பிய அடுத்த நிமிடமே அவர் பெட்ரோல் கேனை எடுத்துக்கொண்டு நடுரோட்டில் வந்து தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். அதிகாலை நேரம் என்பதால் அந்தப் பகுதிகளில் அதிக நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் நடுரோட்டில் ஒரு பெண் தீக்குளிப்பதை கண்ட அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து பதறி அடித்துக் கொண்டு அவருடைய பெற்றோர்களும் விரைந்து கோவைக்கு வந்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சினேகாவிற்கு 90% தீக்காயம் இருந்ததால் அவர் சில நிமிடங்களில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். சினேகா ஒருவரை காதலித்து வந்ததாகவும் இந்த காதல் பெற்றோர்கள் எதிர்ப்பால் தோல்வியில் முடிந்ததால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

More News

பில்கேட்ஸை சந்தித்த பிரபல நடிகரின் மனைவி

மைக்ரோசாஃப்ட் தலைவரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான பில் கேட்ஸ் கடந்த சில நாட்களாக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.

கமலுடன் இணைப்பு குறித்து ரஜினிகாந்த் அதிரடி பேட்டி!

வரும் சட்டமன்ற தேர்தலில் இரண்டு வலுவான திராவிட கட்சிகளின் கூட்டணியை எதிர்த்து இரண்டு திரையுலக ஜாம்பவான்களான கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் எதிர்த்து போட்டியிடவுள்ளனர்.

காயத்ரி ரகுராமுக்கு ஏற்பட்ட திடீர் இழப்பு!

நடிகை காயத்ரி ரகுராம் கடந்த இரண்டு நாட்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு எதிராக காரசாரமாக டுவீட்டுக்களை பதிவு செய்தார். ஒருசில டுவிட்டுக்களில் நேரடி சவாலும் விடுத்திருந்தார்.

ரஜினி சொன்ன 'அதிசயம்' குறித்து கமல்ஹாசன் கருத்து:

பொது மேடையிலோ அல்லது செய்தியாளர்களின் பேட்டியிலோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரே ஒரு வார்த்தை சொன்னால் கூட போதும், அது ஊடகங்களுக்கு ஒரு வாரம் தீனி போடும்

வெற்றிடம் குறித்து நடிகர் விவேக்கின் நகைச்சுவை பதில்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெற்றிடம் குறித்த கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் ஆரம்பித்த இந்த வெற்றிடம் குறித்த கருத்தை சிலர் ஆதரிக்கவும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும்