ஜெயம் ரவியின் 'கோமாளி' சென்சார் தகவல்

  • IndiaGlitz, [Tuesday,August 13 2019]

ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய 'கோமாளி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 143 நிமிடங்கள் என்பதை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்துள்ளது

முழுக்க முழுக்க காமெடி அம்சம் கொண்ட இந்த படம் சென்சாரில் 'யூ' சான்றிதழ் பெறும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதேபோல் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழை அளித்துள்ளனர். இந்த சான்றிதழ் குறித்த புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டு படக்குழுவினர் தங்கள் சேட்டையை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தியுள்ளனர்.

வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யூக்தா ஹெக்டே, கேஎஸ் ரவிகுமார், யோகிபாபு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

'பிகில்' விஜய் குறித்த முக்கிய அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்

தளபதி விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்துடன் முடிந்துவிடும் என்று வெளிவந்த செய்தியை பார்த்தோம்.

திருச்சியில் இனி புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை: கோமாளி பிரச்சனையில் அதிரடி முடிவெடுத்த தயாரிப்பாளர் சங்கம்!

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் வரும் 15ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் திருச்சி ஏரியாவில் மட்டும்

காஷ்மீர் விவகாரத்தில் ரஜினியின் குரல் தமிழகத்தின் குரல்: பிரபல அரசியல்வாதி

காஷ்மீரில் 370 ஆவது சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் மத்திய அரசு நீக்கி, அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க முடிவு எடுத்துள்ளது.

திருமணம் குறித்து வரலட்சுமியின் அதிரடி அறிவிப்பு! சரத்குமார் ஒப்புக்கொள்வாரா?

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி சரத்குமார். இவர் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் நடித்து வரும் படங்களில் ஒன்றாகிய 'கன்னிராசி'

சிவகார்த்திகேயன் படத்தில் அறிமுகமாகும் இயக்குனர் பாண்டிராஜ் வாரிசு!

கோலிவுட் திரையுலகில் பிரபலங்களின் வாரிசுகள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி வருவது வழக்கமான ஒன்றே. நடிகர்கள் விஜய் சேதுபதியின் மகன், ஜெயம் ரவியின் மகன் உள்பட பல நட்சத்திரங்களின்