வடிவேலுவுடன் நடித்த காமெடி நடிகர் பரிதாப பலி!

  • IndiaGlitz, [Thursday,October 31 2019]

வைகைப்புயல் வடிவேலுவுடன் நடித்த காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சமீபத்தில் படப்பிடிப்பின்போது திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில் தற்போது மேலும் ஒரு காமெடி நடிகர் குளியலறையில் வழுக்கி விழுந்து பரிதாபமாக பலியானார்.

’ஆறு’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த காமெடி நடிகர் ஜெயச்சந்திரன் இன்று தனது வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்து மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66

100க்கும் மேலான தமிழ் திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்த நடிகர் ஜெயச்சந்திரன் கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு படப்பிடிப்புக்குச் சென்று வீடு திரும்பிய ஜெயச்சந்திரன் மறுநாள் காலை குளியலறைக்கு சென்ற போது எதிர்பாராத வகையில் வழுக்கி விழுந்ததால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்ததாக தெரிகிறது. உயிரிழந்த ஜெயச்சந்திரனுக்கு லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்,

ஜெயச்சந்திரனின் மறைவு கோலிவுட் திரையுலகை அதிர்ச்ச்குள்ளாக்கியுள்ளது. ஜெயச்சந்திரனுக்கு விஷால், பொன்வண்ணன் உள்பட பல திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.,

More News

விஜய்சேதுபதியின் அடுத்தபட டைட்டில் அறிவிப்பு!

விஜய்சேதுபதியின் நடிப்பில் வெங்கடகிருஷ்ணா ரோஹித் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாகவுள்ளது என்பதையும், இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் என்ற

விவசாய பண்ணை குட்டையில் விழுந்து 4 வயது சிறுவன் பலி: திருந்தாத பெற்றோர்கள்

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டு என்ற கிராமத்தை சேர்ந்த 2 வயது சுஜித், பெற்றோரின் அலட்சியத்தால் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான நிலையில்,

மோசடி வழக்கில் பிரபல நடிகை குற்றவாளி என தீர்ப்பு: பிற்பகலில் தண்டனை விபரம்!

கேரளாவை சேர்ந்த நடிகை சரிதா நாயருக்கு சொந்தமான நிறுவனம் ஒன்று கோவையில் இயங்கி வந்தது. இந்த நிறுவனம் காற்றாலை அமைத்து கொடுப்பதாக

சிபிராஜின் அடுத்த படத்தில் கமல்ஹாசன் பட நாயகி!

கோலிவுட் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவரான சிபிராஜ் தற்போது இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும், இந்த படம் 'காவுல்தாரி'

மக்களின் உயிரை கொல்ல அரசே இலக்கு நிர்ணயிப்பதா? தமிழக அரசுக்கு காமெடி நடிகர் கண்டனம்

பொதுமக்களின் உயிரை கொலை செய்ய ஒரு அரசு இலக்கு நிர்ணயிப்பது கடும் கண்டனத்துக்குரியது என காமெடி நடிகர் மயில்சாமி தெரிவித்துள்ளார்