close
Choose your channels

சிபிராஜின் அடுத்த படத்தில் கமல்ஹாசன் பட நாயகி!

Thursday, October 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவரான சிபிராஜ் தற்போது இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும், இந்த படம் ’காவுல்தாரி’ என்ற கன்னட படத்தின் தமிழ் ரீமேக் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

‘கபடதாரி’ என்ற டைட்டில் வைக்கப்படுள்ள இந்த படத்தில் சிபிராஜூக்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 1ம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகை பூஜா குமார் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் கமல்ஹாசனின், ‘விஸ்வரூபம்’, விஸ்வரூபம் 2, உத்தமவில்லன்’ போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

‘கபடதாரி’ படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றுக்காக பல நடிகைகள் பரிசீலனையில் இருந்த நிலையில் பூஜாகுமார் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என்று தான் கருதியதாகவும், இதனையடுத்து அமெரிக்காவில் உள்ள பூஜாகுமாரை தொடர்பு கொண்டு கதை மற்றும் அவருடைய கேரக்டர் குறித்து தெரிவித்தவுடன் அவர் முழு சந்தோஷத்துடன் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். விரைவில் அவர் அமெரிக்காவில் இருந்து படப்பிடிப்புக்காக சென்னை வரவுள்ளார்.

சைமன்கிங் இசையில், ராசாமதி ஒளிப்பதிவில் ப்ரவீண் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.