பிரபல நகைச்சுவை நடிகரின் மகனுக்கு சப் கலெக்டர் பதவி: குவியும் வாழ்த்துக்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் தங்கள் வாரிசுகளை திரையுலகில் பிரபலமாக்கவே விரும்பும் நிலையில் காமெடி நடிகர் ஒருவர் தனது மகனை சப்-கலெக்டர் ஆக்கியுள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகில் ரஜினி உள்பட பல பிரபலங்களுடன் காமெடி நடிகராக நடித்தவர் நடிகை சின்னி ஜெயந்த். இவரது மகன் ஸ்ருதன்ஜெய் நாராயணன் என்பவர் 2019ஆம் ஆண்டு நடந்த யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று பின்னர் டெல்லி நடந்த பயிற்சியில் கலந்து கொண்டார்.
பயிற்சி முடிந்த பிறகு ஸ்ருதன்ஜெய் நாராயணன் மத்திய அரசின் திறன் வளர்ப்பு சார் செயலாளராக இருந்த நிலையில் அதன்பின் தூத்துக்குடி பயிற்சி துணை ஆட்சியராக இருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் திருப்பூர் சப் கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் 75ஆவது ரேங்க் பெற்ற இவர் திருப்பூர் மாவட்டத்தில் சப் கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments