close
Choose your channels

கை, கால் செயலிழந்து படுத்த படுக்கையாய் இருக்கும் காமெடி நடிகர்.. வடிவேலு உதவி செய்வாரா?

Tuesday, June 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு கை மற்றும் ஒரு கால் செயல் இழந்து படுத்த படுக்கையாக தமிழ் காமெடி நடிகர் ஒருவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் தனக்கு உதவி தேவை என்று வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தவர் காமெடி நடிகர் வெங்கல்ராவ். கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவருக்கு தற்போது ஒரு கை மற்றும் ஒரு கால் செயல் இழந்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற பண வசதி இல்லை என்றும், தனக்கு ஒரு கை கால் செயல்படவில்லை என்றும் பேசக்கூட முடியவில்லை என்றும் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பதாகவும் எனவே தனக்கு சினிமா கலைஞர்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். வடிவேலு உடன் பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ள நிலையில் வடிவேலு உள்பட சினிமா கலைஞர்கள் அவருக்கு உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த வெங்கல்ராவ், முதலில் ஃபைட் யூனிட்டில் பணி செய்த நிலையில் அதன்பின்னர் வடிவேலுவால் அடையாளம் காணப்பட்டு தன்னுடைய நகைச்சுவை குழுக்களில் ஒருவராக அவரை சேர்த்துக் கொண்டார். இருப்பினும் அவருக்கு பட வாய்ப்பு மிகவும் குறைவாக கிடைத்தது என்பதும் சம்பளமும் குறைவாக கிடைத்ததால் தற்போது அவர் வறுமையில் வாழ்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வெங்கல்ராவ் தனது சொந்த ஊரான விஜயவாடாவில் இருக்கும் நிலையில் அவர் தனக்கு உதவி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கையை ஏற்று திரை உலக பிரபலங்கள் அவருக்கு உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment