நடிப்பு நாயகன் மோகன்லாலுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

  • IndiaGlitz, [Friday,May 21 2021]

மலையாள சூப்பர் ஸ்டார் மற்றும் நடிப்பு நாயகன் மோகன்லால் இன்று தனது 61வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகினர் பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாமும் நம்முடைய மனம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்

நடிகர் மோகன்லால் கடந்த 1980ஆம் ஆண்டு பாசில் இயக்கிய ’மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் பல வெற்றி படங்களை தொடர்ச்சியாக கொடுத்து வந்தார் என்பதும் கடந்த 1996ஆம் ஆண்டு ’பரதம்’ என்ற திரைப்படத்திற்காக தேசிய விருதைப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாவது முறையாக ’வனப்பிரஸ்தம்’ என்ற திரைப்படத்திற்கும் அவருக்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழ் ரசிகர்களுக்கும் மோகன்லால் பரிச்சயமானவர் என்பது தெரிந்ததே. மணிரத்தினம் இயக்கிய ’இருவர்’ கமல்ஹாசன் நடித்த ’உன்னைப் போல் ஒருவன்’ விஜய் நடித்த ’ஜில்லா’ உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் மோகன்லால் நடித்த ’த்ரிஷ்யம்’ திரைப்படம் இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று என்பதும் இந்த படம் தமிழ் உள்பட கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

மனைவியுடன் சென்று தடுப்பூசி போட்டு கொண்ட பிரபல நடிகர்: வைரல் வீடியோ

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸ் ஆட்டிப் படைத்துக் கொண்டு வரும் நிலையில் கொரோனா வைரஸில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள

இதை கட்டாயமாக்கினால் கொரோனாவுக்கு தீர்வு கிடைக்கும்: தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு டுவிட்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேலாகியும் கொரோனா வைரஸ் பாதிப்பு

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கேப்டன்....!தொண்டர்கள் மகிழ்ச்சி....!

நேற்று(19.05.2021) அதிகாலை 3.30 மணியளவில், தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு மூச்சுத்திணறல்

மே மாத மின்சார ரீடிங் எப்படி எடுப்பது? மின்வாரியம் அறிவிப்பு

மே மாதத்திற்கான மின்சார ரீடிங்கை மின் நுகர்வோரே எடுக்கலாம் என மின்சார வாரியம் அனுமதி அளித்துள்ளது.

கண்மணிகளை காப்பாற்றுங்கள்: தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்த கமல்ஹாசன்!

கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகள் மற்றும் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெற்றோர்களின் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும்