close
Choose your channels

கண்மணிகளை காப்பாற்றுங்கள்: தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்த கமல்ஹாசன்!

Thursday, May 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகள் மற்றும் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெற்றோர்களின் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

கொரோனா பெருந்தொற்றின்‌ கொடூர தாண்டவத்தால்‌ நிறைய குழந்தைகள்‌ பெற்றோரை இழந்து தவிக்கின்றனர்‌. வாடி நிற்கும்‌ பிஞ்சுகளின்‌ வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கறது. 

மத்தியப்பிரதேசம்‌, சத்தீஸ்கர்‌ மாறில அரசுகள்‌ பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்றும்‌ நிதி உதவி வழங்கப்படும்‌ என்று அறிவித்துள்ளது. புது டெல்லி அரசும்‌ இலவச கல்வி வழங்குகிறது.

ஆந்திர அரசு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கிக்கணக்கு துவக்கு 10 லட்சம்‌ ரூபாய்‌ டெபாசிட்  தொகையாக செலுத்தப்படும்‌ என்றும்‌ இந்த டெபாசிட்‌ தொகையின்‌ மூலமாகக்‌ இடைக்கும்‌ வட்டி வருவாய்‌ மூலம்‌ பாதுகாவலர்‌ அந்தக்‌ குழந்தையை நன்றாக கவனிக்க வேண்டும்‌ என்றும்‌ அறிவித்துள்ளது.

பெற்றோரை இழந்து தவிக்கும்‌ குழந்தைகளை அவர்களின்‌ உறவினர்‌ அல்லது பெற்றோரில்‌ நெருங்கிய நட்பு வட்டாரத்தினர்‌ பராமரிப்பதே சிறந்தது என நிபுணர்கள்‌ பரிந்துரைக்‌கின்றனர்‌. ஏற்கனவே இழப்பில்‌ வாடும்‌ குழந்தைகளை முன்பின்‌ தெரியாதவர்கள்‌ தத்தெடுத்தால்‌ குழந்தைகள்‌ மனரீதியிலாக பாதிக்கப்பட அதிக வாய்ப்பிருக்கிறது என்‌கிறார்கள்‌.

எனவே பெண்கள்‌ மற்றும்‌ குழந்தைகள்‌ மேம்பாட்டு துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ மாநில துறைகளும்‌ சிறார்‌ நீதி சட்டம்‌ அடிப்படையில்‌ பெற்றோரை இழந்தவர்களைப்‌ பராமரிக்க "உறவினர்‌ பராமரிப்பு சட்டத்தை வளர்ப்பு மற்றும்‌ பராமரிப்பு ஏற்பாடுகளின்‌ ஒரு பகுதியாக செயல்படுத்த வேண்டும்‌.

மாவட்ட குழந்தை பாதுகாப்பு பிரிவு சார்பில்‌ இந்த நெருக்கடியான காலத்தில்‌ கொரோனாவால்‌ பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்‌ சிகிச்சைப்‌ பெறும்‌ பெற்றோர்களின்‌ குழந்தைகள்‌ பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்யவும்‌ கண்காணிப்புக்‌ குழு ஒன்றை அமைக்க வேண்டும்‌. குழந்தைகளுக்கும்‌ அவர்களை பராமரிக்கவும்‌ ஊக்கத்தொகை வழங்கவேண்டும்‌.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூழலை அமைத்து தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று தமிழக முதல்வரிடம்‌ கோரிக்கை வைக்‌கறேன்‌.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.