தமிழகத்தில் திரையிட காங்கிரஸ் கட்சி தடை கோரும் திரைப்படம்

  • IndiaGlitz, [Wednesday,January 02 2019]

திரைப்படத்தை திரைப்படமாக பார்க்காமல் அந்த திரைப்படத்திற்கு தடை கோரி அரசியல் கட்சிகள் போராட்டம் செய்வது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் ஒரு திரைப்படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் 'The Accidental Prime Minister'. இந்த படம் வரும் 11ஆம் தேதி முதல் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. மன்மோகன்சிங் வேடத்தில் அனுபம்கேர் நடித்துள்ள இந்த இந்தி திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்க கூடாது என தமிழக தலைமைச்செயலாளர், உள்துறைச் செயலாளரிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

எதிர்பாராத வகையில் மன்மோகன்சிங் அவர்கள் இந்திய பிரதமர் ஆனது முதல் அவர் ஆட்சி செய்த பத்து ஆண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் இந்த படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, லாலு பிரசாத் யாதவ், நரசிம்மராவ், எல்.கே.அத்வானி உள்பட பல கேரக்டர்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

 

More News

முன்னாள் பி.ஆர்.ஓவின் கருத்துக்களை நம்ப வேண்டாம்: விஜய் தரப்பு அறிக்கை

தளபதி விஜய்யின் பி.ஆர்.ஓஆக இருந்த ஒருவர் சமீபத்தில் அளித்த ஒருசில பேட்டிகளில் விஜய்யுடன் ஒருசில நடிகர்களை ஒப்பிட்டும், சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் தெரிவித்திருந்தார்.

500 ஐடி இளம்பெண்களுக்காக திரையிடப்பட்ட தமிழ் திரைப்படம்

சமீபத்தில் வெளிவந்த சிவகார்த்திகேயனின் 'கனா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே

பிறந்த நாளில் சிம்புவின் இரண்டு படங்கள் ரிலீஸ்?

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கிய 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்

25 ஆண்டு திருமண வாழ்க்கை: பில்கேட்ஸ் மனைவி பெருமிதம்

உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் நேற்று தனது மனைவி மெலிண்டாவுடன் 25வது திருமண நாளை கொண்டாடினார்.

பொங்கலுக்கு வெளியாகும் 'பரியேறும் பெருமாள்' கதிர் படம்

'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில் நடித்த நடிகர் கதிர் நடித்த படங்களில் ஒன்று 'சிகை'. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி ஒருசில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை