close
Choose your channels

பிறந்த நாளில் சிம்புவின் இரண்டு படங்கள் ரிலீஸ்?

Wednesday, January 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கிய 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் ஒருசில பணிகள் நிறைவடையாததால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி சிம்புவின் பிறந்த நாளில் இந்த படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு சிம்புவின் பிறந்த நாளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. எனவே வரும் இரண்டு ஆண்டு சிம்புவின் பிறந்த தினங்களில் சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டம் மட்டுமின்றி அவரது படம் வெளியாகும் தினமாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சீமான் இயக்கவுள்ள ஒரு படத்திலும் சிம்பு நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.