எங்க பரம்பரையிலேயே முதல் கார், அம்மா அழுதுட்டாங்க: 'குக் வித் கோமாளி' புகழ் வீடியோ!

  • IndiaGlitz, [Monday,March 01 2021]

குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ், சமீபத்தில் சொந்த சம்பாதிப்பில் கார் வாங்கினார் என்பதும் இந்த காருடன் அவர் நின்ற புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது தான் வாங்கிய கார் குறித்த வீடியோவை நெகழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறிய போது ’தன்னுடைய பரம்பரையிலேயே முதல் முறையாக கார் வாங்கி இருப்பதாகவும், கார் வாங்கி இருப்பதாக தன்னுடைய அம்மாவிடம் சொன்னதும் அவர் கண் கலங்கி விட்டார் என்றும், என்னுடைய பையன் கார் வாங்கி விட்டான் என்று பெருமையாக அவர் கூறிக் கொண்டிருந்தார் என்றும் தெரிவித்தார்.

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக கலைஞர்களிடம் நான் கார் வாங்கியதை கூறியபோது, அனைவரும் மகிழ்ச்சி அடைந்து எனக்கு வாழ்த்து கூறினார்கள் என்றும் நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்றும் கோடி நன்றிகள் என்றும் புகழ் அந்த வீடியோவில் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பார்த்திபன், ஆர்ஜே பாலாஜி வெளியிட்ட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வைரல்!

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் மற்றும் ஆர்ஜே பாலாஜி ஆகிய இருவரும் தங்களுடைய சமூக வலைதளங்களில் இளம் நடிகர் கௌதம் கார்த்திக் நடித்து வரும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்

அரசு இதழில் இடம்பெற்ற 10.5% உள் இடஒதுக்கீடு செய்தி… முதல்வருக்கு குவியும் பாராட்டு!

வன்னியர்கள் 40 ஆண்டு காலமாக இடஒதுக்கீட்டு முறையில் உள் இடஒதுக்கீட்டு அம்சத்தை கோரி வருகின்றனர்

எடப்பாடி வடிவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையே பார்த்தேன்… புகழ்ந்து தள்ளும் முக்கிய அமைச்சர்!

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையர் டெல்லியில் இருந்து கடந்த 26 ஆம் தேதி மாலை வெளியிட்டார்.

அரபு ஸ்டைலில் வெரைட்டி காட்டும் நடிகை ராய் லட்சுமி… வைரல் வீடியோ!

தமிழில் “கற்க கசடற“ படத்தில் லட்சுமி ராய் என்ற பெயரில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. பின்னர் தன்னுடைய பெயரை நியூமரலாஜிபடி மாற்றிக் கொண்டதும் ரசிகர்களுக்கு தெரிந்த ஒன்றுதான்.

சிறு வயதில் சூப்பர் ஸ்டாரின் இந்தப் பாடலுக்கு நான் அடிமை… முன்னணி நடிகரின் மலரும் நினைவுகள்!

நடிகர் சூர்யாவின் தம்பியும் தற்போது தமிழில் முன்னணி நடிகராகவும் இருந்து வரும் நடிகர் கார்த்தி,