யாரும் எதிர்பாராத டிவிஸ்ட்.. குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் இவரா?

  • IndiaGlitz, [Tuesday,July 25 2023]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி இறுதி கட்டத்திற்கு வந்துள்ள நிலையில் வரும் சனி ஞாயிறு கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் ஆறு போட்டியாளர்கள் தகுதி பெற்றிருந்தனர். விசித்ரா, மைம் கோபி, கிரன், ஸ்ருஷ்டி டாங்கே, ஆண்ட்ரியன் மற்றும் ஷிவாங்கி ஆகியோரில் விசித்ரா அல்லது ஆண்ட்ரியன் தான் டைட்டில் வின்னர் பட்டத்தை வெல்வார்கள் என்று கூறப்பட்டது. மேலும் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை ஷிவாங்கி என்பதால் அவருக்கு இரண்டாவது இடம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி மைம் கோபி தான் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார் என்றும் ஸ்ருஷ்டி டாங்கே இரண்டாவது இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் டைட்டில் வின்னருக்கு 10 லட்ச ரூபாய், இரண்டாவது இடம் பெற்றவருக்கு ஐந்து லட்ச ரூபாய் பரிசு அளிக்கப்பட்டதாகவும் அவர்களுடைய கோமாளிகளுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் பரிசு அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் மைம் கோபி என்பது பார்வையாளர்களுக்கு பெரிய ட்விஸ்ட்டாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த,  “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”: ZEE5 தளத்தில் சாதனை

ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில்,  நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில்  உருவான ஆக்சன் கமர்ஷியல்  திரைப்படமான   “காதர்

ஒருவழியாக உறுதியாகிறது 'குற்றப்பரம்பரை'.. இயக்குனர் யார் தெரியுமா?

நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி எழுதிய 'குற்றப்பரம்பரை' என்ற நாவலை படமாக்க இயக்குனர் மையம் பாரதிராஜா மற்றும் இயக்குனர் பாலா போட்டி போட்ட நிலையில் தற்போது ஒரு வழியாக இந்த படம் உருவாக

செம்ம ஸ்மார்ட்டான கெட்டப்புக்கு மாறிய விஜய் சேதுபதி.. இந்த படத்திற்காகவா?

நடிகர் விஜய் சேதுபதி ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தனது கெட்டப்பை மாற்றி மிரட்டி வருகிறார் என்பதும் குறிப்பாக சமீபத்தில் வெளியான 'ஜவான்' படத்தின் கெட்டப்[ மிரள வைத்தது என்பதும் தெரிந்ததே

தனுஷின் அடுத்த படத்தில் இணையும் 4 பிரபலங்கள்.. வேற லெவலில் இருக்கும் போல..!

தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் இரண்டு பிரபலங்கள் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து இந்த படம் வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ்.. 'ஜெயிலர்' படத்தின் முக்கிய அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம்  வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.