close
Choose your channels

திரையில் தான் வில்லன்.. நிஜத்தில் ஹீரோவான 'குக் வித் கோமாளி' டைட்டில் வின்னர்..!

Saturday, February 17, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரையில் வில்லனாக நடித்த நம்பியார் முதல் பல நடிகர்கள் நிஜத்தில் ஹீரோவாகி செய்த சாதனைகள் பலர் அறிந்தது. அந்த வகையில் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்த குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் மைம் கோபி செய்த நெகிழ்ச்சியான செயல் தற்போது இணையத்தில் வைரல் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக ஜெயித்தவர் மைம் கோபி என்பதும் அவர் அந்த நிகழ்ச்சியின் போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து வருவதாகவும், இன்னும் பல உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் மேலும் ஒரு உதவி செய்துள்ளார்.

ஏற்கனவே தனக்கு வரும் வருமானத்தின் ஒரு பகுதியை சமூக சேவைக்காக செலவு செய்து வரும் மைம் கோபி, ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால் அந்த பணத்தை புற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து விடுவேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

அந்த வகையில் தற்போது அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார். வாழ்க்கையில் ஒரு முறையாவது விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஏக்கத்தில் இருக்கும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், வாழ்க்கையையே சவாலாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் அவர்களை விமானத்தில் அழைத்துச் சென்று அவர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கிய மைம் கோபிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment