விஜே மணிமேகலை வீட்டில் வெடித்த குக்கர்: வைரலாகும் வீடியோ

  • IndiaGlitz, [Wednesday,February 19 2020]

தமிழின் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் விஜே ஆக பணிபுரிந்து கொண்டிருக்கும் மணிமேகலை கடந்த 2017 ஆம் ஆண்டு டான்ஸ் மாஸ்டர் உசேன் என்பவரை திருமணம் செய்தார்

இந்த நிலையில் இன்று நேற்று விஜே மணிமேகலை தனது வீட்டில் உள்ள சமையல் அறையில் சாப்பாடு சமைத்துக் கொண்டிருக்கும் போது திடீரென குக்கர் வெடித்ததால்பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவரது கணவர் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

இந்த வீடியோவில் குக்கர் வெடித்ததால் அதிலுள்ள சாதம் சமையல் அறை முழுவதும் சிதறி இருக்கும் காட்சி உள்ளது. இந்த வீடியோவில் விஜே மணிமேகலை கூறியபோது ’நான் சரியான அளவுடன் தான் அரிசியும் தண்ணீரும் போட்டேன். ரொம்ப நேரமாக விசில் வரவே இல்லை இதனை அடுத்து திடீரென குக்கர் வெடித்து உள்ளது. என்ன தவறு நடந்தது என்று எனக்கு தெரியவில்லை

வழக்கமாக மதிய சாப்பாடு செய்து கொடுக்க ஒரு பெண் வருவார். அவர் இன்று வரவில்லை என்பதால் நானே முயற்சி செய்தேன். என்னுடைய முதல் முயற்சியே இப்படி சொதப்பி விட்டது என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

More News

ட்ரம்பை கடவுளாக வணங்கி வரும் கர்நாடக இளைஞர் – மத்திய அரசுக்கு வைத்த கோரிக்கை

கர்நாடகத்தை சேர்ந்த புஷா கிருஷ்ணா என்பவர் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மீது கொண்ட ஈர்ப்பினால் அவரைக் கடவுளாகவே நினைக்க ஆரம்பித்தார்

ரஜினியின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' ஒளிபரப்பு எப்போது?

டிஸ்கவரி சேனல் தயாரித்த 'மேன் வெர்சஸ் வைல்ட்' என்ற ஆவணப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தார் என்றும் இந்த ஆவணபடத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது

சிம்புவின் 'மாநாடு' படப்பிடிப்பு தொடக்கம்: பூஜை ஸ்டில்கள் 

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்க உள்ள அரசியல் ஆக்சன் படமான 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க உள்ளதை அடுத்து இன்று காலை இந்த படத்தின் பூஜை நடைபெற்றது

செல்பியை அடுத்து மீண்டும் வைரலாக காத்திருக்கும் விஜய்யின் புகைப்படம்!

சமீபத்தில் 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்றபோது ரசிகர்களை சந்தித்த விஜய், அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார் என்பதும்,

'வலிமை' படப்பிடிப்பில் அஜித்துக்கு காயமா? பரபரப்பு தகவல்!

அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சென்னை படப்பிடிப்பு கடந்த திங்கட்கிழமை