close
Choose your channels

'குக் வித் கோமாளி' நடிகைக்கு திருமணமா? விஜய் டிவி பிரபலத்தின் பதிவால் பரபரப்பு!

Tuesday, November 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகைக்கு திருமணம் நடைபெற இருப்பதாக விஜய் டிவி பிரபலம் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி மற்றும் பாக்கிய லட்சுமி ஆகிய சீரியல்களில் நடித்தவர் நடிகை ரித்திகா. இருப்பினும் ’குக் வித் கோமாளி’ சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பின் பார்வையாளர்களின் மனதை வென்றார் என்பதும் அவரும் பாலாவும் அடித்த லூட்டிகள் ரசிக்கும் வகையில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு சில வாரங்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் இருந்தாலும் ரித்திகா அனைவரின் கவனத்தையும் பெற்றார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ரித்திகாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அவர் நடித்து வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அவரது திருமணம் குறித்த காட்சிகள் விரைவில் வரவிருக்கும் நிலையில் உண்மையாகவே அவருக்கு திருமணம் நடைபெற உள்ள செய்தியை கேட்டு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

குறிப்பாக விஜய் டிவி பிரபலமான டிடி தனது சமூக வலைத்தளத்தில் 'ரித்திகாவை விரைவில் மணப்பெண்ணாக பார்க்கவிருக்கின்றேன், மிகவும் மகிழ்ச்சி’ என்று பதிவு செய்துள்ளதை அடுத்து ரித்திகாவின் திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment