மீண்டும் நாயகனாக 'குக் வித் கோமாளி' அஸ்வின்.. இயக்குனர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,February 09 2023]

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் சமீபத்தில் வெளியான ’செம்பி’ என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் தற்போது மேலும் ஒரு திரைப்படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆபீஸ்’ உள்பட ஒரு சில சீரியல்களில் நடித்த அஸ்வின் அதன் பின் ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இந்த நிலையில் அஸ்வின் நடித்த ’என்ன சொல்லப் போகிறாய்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் சமீபத்தில் வெளியான ’செம்பி’ திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது.

இந்த நிலையில் தற்போது அவர் மேலும் ஒரு திரைப்படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை அரவிந்த் சீனிவாசன் என்பவர் இயக்க உள்ளார். ஏற்கனவே அருள்நிதி நடித்த ’தேஜாவு’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜென்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

10 வருடங்களுக்கு பின் தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகை.. 'வாரிசு' நடிகர் தான் ஹீரோ..!

'வாரிசு' படத்தில் நடித்த நடிகர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் மலையாள நடிகை நாயகியாக நடிக்க இருப்பதாகவும், இவர் 10 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தமிழில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய்-ஷாருக்கான் இணையும் ரூ.900 கோடி பட்ஜெட் படம்.. இயக்குனர் யார் தெரியுமா?

விஜய் மற்றும் ஷாருக்கான் இணையும் படம் ரூ.900 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 

லிப்லாக் முத்தம், படுக்கையறை காட்சிகள்: குழந்தை நட்சத்திரமாக நடித்தவரா இவர்?

தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை தற்போது இளம் பெண்ணாக மாறிய நிலையில் முதல் படத்திலேயே மது அருந்துதல், படுக்கை அறை காட்சிகள், லிப்லாக் முத்தம் போன்ற காட்சிகளில்

'ஜெயிலர்' படத்தின் ஷூட்டிங்ஸ்பாட் புகைப்படங்கள்.. செம ஆக்சன் படமாக இருக்கும்போல..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகளின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அந்த புகைப்படங்களை பார்க்கும் போது

சொன்னப்படியே போலீஸில் புகார் அளித்த விஜே மகேஸ்வரி.. சிக்க போவது யார் யார்?

 பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்ட விஜே மகேஸ்வரி தன்னை பற்றியும் தனது மகனைப் பற்றியும் அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை