close
Choose your channels

'குக் வித் கோமாளி' குக்குகளுக்கு இவ்வளவு சம்பளமா? அதிகபட்சம் வாங்குவது இவரா?

Wednesday, May 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் சமீபத்தில் தொடங்கிய நிலையில் ஆரம்பமே அட்டகாசமாக இருப்பதாகவும் வெங்கடேஷ் பட் இல்லாதது ஒரு சிறு குறையாக இருந்தாலும் குக்குகள் மற்றும் கோமாளிகள் அசத்தலாக காமெடி செய்து வருகின்றனர் என்றும் மற்ற சீசன்கள் போலவே இந்த சீசனும் சூப்பராக இருக்கிறது என்றும் பார்வையாளர்களின் கருத்துக்கள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த சீசனில் 10 குக்குகள் மற்றும் 10 கோமாளிகள் கலந்து கொண்டிருக்கும் நிலையில் செஃப் தாமு மற்றும் செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். கடந்த மூன்று சீசன்களில் ரக்சன் மட்டுமே தொகுப்பாளராக இருந்த நிலையில் இந்த சீசனில் ரக்சன் மற்றும் மணிமேகலை ஆகிய இருவரும் தொகுத்து வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த சீசனில் கலந்து கொண்ட 10 குக்குகளின் சம்பள விவரங்கள் வெளியாகி உள்ள நிலையில் அதில் அதிகபட்சமாக பிரியங்கா மற்றும் சுஜிதா தான் அதிக சம்பளம் வாங்குவதாக தெரிய வந்துள்ளது. இந்த சீசனில் கலந்து கொண்ட 10 குக்குகளின் சம்பள விவரங்கள் இதோ:

பிரியங்கா- ரூ. 18,000, சுஜிதா- ரூ. 18,000, விடிவி கணேஷ்- ரூ. 15,000, இர்பான்- ரூ. 15,000, திவ்யா துரைசாமி- ரூ. 12,000, ஸ்ரீகாந்த் தேவா- ரூ. 10,000, வசந்த்- ரூ. 10,000, அக்ஷய் கமல்- ரூ. 10,000, ஷாலின் சோயா- ரூ. 10,000, வசந்த்- ரூ. 10,000

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment