ஊசி என்றாலே பயம், ஆனாலும் தடுப்பூசி போட்டு கொண்டேன்: 'குக் வித் கோமாளி' பிரபலம்

  • IndiaGlitz, [Wednesday,May 19 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே வேற லெவலில் பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்குமே கிட்டத்தட்ட சினிமா வாய்ப்புகள் கிடைத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‘குக்’களில் ஒருவர் பவித்ரா லட்சுமி. இவர் தற்போது சதீஷ் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் கொரோனா வைரஸ் பாதிப்பு முடிவுக்கு வந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பவித்ரா, சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தெரிவித்து புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். ’பொதுவாக எனக்கு ஊசி என்றாலே மிகப் பெரிய பயம் என்றும் ஆனாலும் இதை கண்டிப்பாக செய்ய வேண்டியது உள்ளது என்றும் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பவித்ரா லட்சுமி தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

More News

கோடி கோடியாய் நிதி கொடுப்பதற்கு பதில் இதை செய்யலாம்: உச்ச நடிகர்களுக்கு பேரரசு வேண்டுகோள்!

தமிழகத்தில் உள்ள உச்ச நடிகர்கள் கோடிகோடியாய் கொரோனா நிவாரண நிதி அளிப்பதற்கு பதிலாக இதைச் செய்யலாம் என இயக்குனர் பேரரசு தனது சமூக வலைத்தளத்தில் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் 

சின்ன வயதில் 'குக் வித் கோமாளி' பவித்ரா: எவ்வளவு க்யூட்டாக இருக்கிறார் பாருங்கள்!

'குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர்களில் ஒருவர் பவித்ரா லட்சுமி என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியின் மூலம் வேற லெவல் பிரபலமானதால் தற்போது இவர் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும்

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 எப்போது கிடைக்கும்?

சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று திமுக ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும்

நிதி அகர்வாலை அடுத்து ரூ.1 லட்சம் நிவாரண நிதி கொடுத்த பிரபல நடிகை!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்றுவதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இனி இ-பதிவு தேவையில்லை...! தளர்வுகள் வெளியானது...!

முன்களப்பணியாளர்களுக்கு இ-பதிவு முறை அவசியமில்லை என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.