close
Choose your channels

'குக் வித் கோமாளி' இர்பான் வைத்த பார்ட்டியில் பிக்பாஸ் மாயா.. சட்டவிரோத செயலை செய்தாரா?

Monday, May 20, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் இர்பான் துபாயில் வைத்த ஒரு பார்ட்டியில் பிக்பாஸ் மாயா கலந்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் இந்த பார்ட்டியில் இந்தியாவில் சட்டவிரோதமாக கருதப்படும் ஒரு செயலை இர்பான் செய்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யூடியுபர் இர்பான் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரது மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் தனது மனைவி வயிற்றில் வளரும் குழந்தை என்ன குழந்தை என்பதை அறிய ஆவலுடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்வது சட்டவிரோதம் என்ற நிலையில் இர்பான் தனது மனைவியை அழைத்துக்கொண்டு துபாய் சென்றதாகவும் அங்குள்ள ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் செய்து என்ன குழந்தை என்பதை அறிந்து கொண்டு அதன் பிறகு அவர் தனது நெருங்கிய நண்பர்களுக்கு பார்ட்டி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த பார்ட்டியில் பிக்பாஸ் மாயா உள்பட பலர் கலந்து கொண்ட நிலையில் தனக்கு பிறக்க போவது பெண் குழந்தை என்பதை தான் அறிந்து கொண்டேன் என்று மகிழ்ச்சியுடன் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இர்பானுக்கு மகள் பிறக்கப் போவதை அடுத்து அவருக்கு அவரது நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.